ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முதல் இடம் காரணம்?

ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் (எஸ்.ஐ.பி.ஆர்.ஐ.) சார்பில் உலகில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முதல் இடம் காரணம்?
ஆயுதம் கொள்முதல் செய்வதில் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. தொடர்ந்து ரஷியா மற்றும் அமெரிக்கா ஆயுதம் விற்பனை செய்வதில் முன்னிலை வகிக்கின்றன. 

2015-ம் ஆண்டியில் ஆயுதம் அதிகமாக கொள்முதல் செய்த நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 10-வது இடத்தை பிடித்து உள்ளது. 

பாகிஸ்தான் ஆயுத கொள்முதலுக்கு 735 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்து உள்ளது.

இப்பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய சவுதி அரேபியா முதலிடம் பிடித்து உள்ளது. 

சவுதி அரேபியா கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 22127 கோடிக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளது. இந்தியா ரூ.21546 கோடிக்கு ஆயுதங்களை வாங்கியுள்ளது. 
இந்தியாவை அடுத்து ஆஸ்திரேலியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரெட்ஸ், ஈராக், சீனா, வியட்நாம், கிரீஸ், பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளது. 

ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. 2011-2015-ம் ஆண்டுகளில் உலக ஆயுத கொள்முதலில் இந்தியாவின் பங்கு 14 சதவீதம்.
ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முதல் இடம் காரணம்?
கடந்த 2006-2010-ம் ஆண்டைய கொள்முதலுடன் ஒப்பிடுகையில் சுமார் 90 சதவிதம் உயர்ந்து உள்ளது.

இரண்டவது இடத்தில் 4.7 சதவீததுடன் சீனா உள்ளது. மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் (3.6%), நான்காவது இடத்தில் பாகிஸ்தானும்(3.3%) உள்ளன.

இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முக்கிய காரணம் ‘‘இந்தியாவை சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் 

சர்வதேச தரத்திலான ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் வெற்றி அடையாதது தான் என்று இந்த துறையை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings