பெண்கள் பருவமடைவது என்பது !





பெண்கள் பருவமடைவது என்பது !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இயல்பாக ஏற்படுகின்ற மாற்றங்க ளான பூப்படைதல், கர்ப்பம், மாதவிடாய் நிறுத்தம் போன்றவை சம்பந்தமாக நிறையப் பேருக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கலாம்.
 

அவை சம்பந்தமான நிறைய மருத்துவப் பிரச்சினைகளும் பெண்களுக்கு ஏற்படலாம். ஆகவே இந்த நிலைமைகள் சம்பந்தமான அடிப்படை விசயங்களை ஒவ்வொரு பெண்களும் அறிந்திருப்பது அவசியமாகும்.

பூப்படைதல் வெறுமனே உள்ளாடையில் உள்ள ரத்தக்கறையை வைத்துக் கொண்டே நம் பெண்கள் பூப்படைந்து விட்டார்களா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சமூகமாகவே நாம் இன்னும் இருக்கிறோம்.

ஒவ்வொருவரும் தன் பிள்ளை பூப்படைந்து விட்டதா என்று 12 அல்லது 13 வயதில் தான் சிந்திக்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலைமை அதுவல்ல. முதன் முதலாய் மாதவிடாய் ஏற்படு வதல்ல பூப்படைதல். முதன் முதலாக மாதவிடாய் ஏற்படுவது மெனார்க்கே (menarche) எனப்படுகிறது, இது பூபடைதலின் ஒரு அங்கமே.

இந்த menarche எனப்படுவது நாம் அறிந்தது போல 11-12 வயதளவில் தான் ஆரம் பிக்கிறது. ஆனாலும் பூப்படைதல் என்ற செயற்பாடு பெண்களிலே 8 வயதிலே யே தொடங்கி விடுகிறது.

நாம் நம் குழந்தைகள் இன்னும் பூப்டையவில்லை என்று மருத்துவரிடம் அழைத்துச் செல்வது பெரும்பாலும் 15 வயதுக்குப் பிறகு தான்.

பாருங்கள் 8 வயதில் நிகழ வேண்டிய ஒரு நிகழ்வு நிகழவில்லை என்று நாம் அறிந்து கொள்வது 15 வயதில். இன்னும் நாம் பின்னுக்கு நிற்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆக பூப்படைதல் என்பது ஒருநாளில் நடந்து முடியும் நிகழ்வல்ல.

இது பெண்களிலே 8 வயதில் தொடங்கி 14 வயதில் முடிவடையும் ஒரு நீண்ட கால தொடர் நிகழ்வாகும். பூப்படைதல் நிகழ்வில் என்ன நடை பெறு கிறது? பூபடைதலின்போது ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்து இளமுதிர் பருவத்திற்குச் செல்கிறாள்.

அப்போது அவள் உடல் மற்றும் உள்ளம் என்பவை பக்குவப்பட்ட முதிர்ச்சி அடைந்த நிலைக்கு மாற்றப் படுகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ்வது ஹார் மோன்களால். 

பூப்படைதல் என்ற செயற்பாடு முதலில் ஆரம்பிப்பது மார்பக வளர்ச்சி. இது ஏற்கனவே சொன்னது போல கிட்டத்தட்ட எட்டுவயதில் ஆரம்பிக்கும்.

அதைத்தொடர்ந்து அப்பெண்ணில் உடல் வளர்ச்சி ஏற்படத் தொடங்கும் அதை ப்போல உடற் பருமனும் சற்று முதியவருக்கு உரிய வகையில் மாறும். 

குறிப் பாக இடுப்புப் பகுதி மற்றும் தொடைகளின் பருமன் அதிகரிக்கும். பின்பு கொஞ் சம் கொஞ்சமாக பெரியவர்களில் காணப்படுவது போன்ற முடி வளர்ச்சி ஏற்படும்.

குறிப்பாக பெண் உறுப்புக்குமேல், மற்றும் அக்குள் பகுதிகளிலே. ஆரம்பத்தில் இந்த முடிகள் செறிவு குறைந்ததாக மெல்லியதாக இருந்தாலும் போகப்போக முதிர் நிலையை அடையும்.

இவ்வாறு 8 வயதில் ஆரம்பிக்கும் பூப்படைதலின் முக்கிய நிகழ்வான முதல் மாதவிடாய் பூப்படைதல் ஆரம்பித்து கிட்டத்தட்ட 2 வருடங்களின் பின்பே நிகழும்.

இந்த ஒரு தனி நிகழ்வைத்தான் நாம் பூப்படைதல் என்று கொண்டாடுகிறோம். மாதவிடாய் ஏற்படுவதோடு பூப்படைதல் நின்று விடுவதில்லை. நான் மேலே சொன்ன நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று பூப்படைதல் நிறைவு பெறுவது 14 வயதில்.

அனேகமாக ஆரம்பத்தில் மாதவிடாய் ஒழுங்கு அற்றதாகவே இருக்கும். இது ஒழுங்காவதற்கு சில காலங்கள் செல்லாலாம். இது பற்றி பூரண அறிவு அப்பி ள்ளைக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டிய ஒன்று. இது பெற்றோரின் கடமையா கும்.

இது தவிர முதன் முதலாக அந்தப்பிள்ளை செக்ஸ் பற்றி சிந்திக்கத் தொடங் கும். மேலே சொன்னது எல்லாம் வெறும் உடலியல் மாற்றங்களே. ஒவ்வொ ரு பெண்ணிலும் பூப்படைதலினால் ஏற்படுகின்ற மாற்றங்கள் பற்றி நிறையச் சந்தேகங்கள் எழும்.

சில பெண்கள் இதை சாதாரணமான நிகழ்வாக ஏற்றுக் கொண்டு சந்தோசப் பட்டாலும் சில பெண்களிலே இது பற்றிய போதிய அறிவின்மையால் பல மன உளைச்சல்கள் ஏற் படலாம். 

இதை தவிற்க்கும் முகமாக ஒவ்வொரு பெண்ணு க்கும் பூப்படைதலின் போது நடைபெறும் மாற்றங்கள் பற்றி போதிய அறிவு வழங்கப்பட வேண்டும்.

இந்த அறிவினை வழங்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது. பூப்படைதலின் முதற்கட்டமாக ஒரு பெண்ணின் மார்பு வளர்ச்சி ஆரம்பிக்கும்.

அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய கஷ்டமாக இருக்கலாம். தொடர்ந்து அவர்களின் அக்குள் மற்றும் பிறப்புறுப்புப் பகுதியில் முடிகள் வளருதல்.

இந்த புதிய மாற்றங்கள் அவர்களின் பூப்படைதலின் ஆரம்ப நிலை என்றும் இதுவே ஒவ்வொரு பெண்ணிலும் நடை பெறும் சாதாரண நிகழ்வு என்றும் அடிப்படை அறிவை

அந்த பெண்ணிற்கு புகட்ட வேண்டியது பெற்றோரின் கடமையாகும். குறிப்பாக தாய் இது பற்றி தன் பெண்ணோடு மனது விட்டு உரையாட வேண்டும்.

இந்நேரத்திலேயே அடுத்த கட்டமாக ஆரம்பிக்கப் போகும் மாதவிடாய் பற்றி அது ஆரம்பிக்கும் முன்னமே எடுத்துக்கூறி அதை அந்த பிள்ளை சாதாரண மான நிகழ்வாக 

ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்க வேண்டியதும் ஒருதாயின் கடமையாகும். சிலவேளைகளில் தாய் மாதவிடாய் காரணமாக சில கஷ்டங்களை சந்திப்பவராக இருக்கலாம்.

ஆனாலும் தன் பிள்ளையிடம் அது பற்றி கூறாமல் மாதவிடாய் என்பது ஒவ் வொரு பெண்ணிலும் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வு என்றும் அதுவே அவர் களின் பெண்மைக்கு அடையாளமாக 

அமைவதோடு பிற்காலத்தில் அவர்க ளிற்கு தாய்மைத் தன்மையை அழிக்கப் போவது என்று கூறி அவர்களை மாதவிடாயை சந்தோசமாக ஏற்றுக் கொள்ளுபடி செய்ய வேண்டும்.

அத்தோடு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கினை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றியும் பூரணமான அறிவை அது ஏற்படுவதற்கு முன்னமே ஒவ்வொரு பெண்பிள்ளைக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியதும் ஒரு தாயின் கடமையாகும்.

மேலும் மாதவிடாய் சம்பந்தமாக அந்தப் பெண்பிள்ளையின் மனதிலே நிறைய சந்தேகங்கள் எழலாம். குறிப்பாக… 

1. மாதவிடாய் காலத்தில் எத்தனை நாளைக்கு இரத்தப் போக்கு இருக்கும்?

2. மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படுமா?

3. மாதவிடாய் காலத்தில் தான் குளிக்கலாமா?

4. மாதவிடாய் காலத்தில் தான் விளையாடலாமா? இந்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் அவர்கள் திண்டாடிக் கொண்டிருக் கலாம்.

தாய் இதுபற்றி தானாகவே பேசத் தொடங்கி இது பற்றிய விபரங்களை பெண்ணுக்கு முழுமையாக தெரியப்படுத்த வேண்டும்.

குறிப்பாக மாதவிடாய் மாதத்திற்கு ஒரு முறை ஏற்பட்டாலும் சரியாக எத்தனை நாளுக்கு ஒருமுறை ஏற்படும் என்பது பெண்ணுக்கு பெண் வேறுபாடும்.
 

21 நாட்களில் இருந்து 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவது சாதாரண மானது என்று தெரியப்படுத்த வேண்டும்.

அதாவது சில பெண்களிலே 21 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படும். சிலபேருக்கு 32 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது சில பேருக்கு 35 நாட்களுக்கு ஒரு முறையோ ஏற்படலாம்.

21 தொடக்கம் 35 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மாதவிடாய் ஏற்படுவது சாதாரணமானது என்றும் இது சரியாக ஒவ்வொரு மாதத்திற்கும் (30 நாட்கள்) ஒரு முறைதான் ஏற்பட வேண்டியதில்லை என்றும் தெளிவு படுத்த வேண்டும்.

அடுத்ததாக மாதவிடாய் காலத்தில் மிதமான வயிற்று வலி ஏற்படலாம் என்றும் இது சில நாட்களுக்கே இருக்கும் என்று ஆரம்பத்திலேயே சொல்லி வைக்க வேண்டும்.

மேலும் மாதவிடாய் காலத்தில் சாதாரணமான நடவடிக்கைகள் (சைக்கிள் ஓட்டுதல், நடனமாடுதல், விளையாடுதல்) போன்ற வற்றிலும் ஈடுபடலாம் என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு தாயும் தன் பெண் பிள்ளையை மாதவிடாய் ஆரம்பத்தினாலும், பூப்படைதலினாலும் ஏற்படப்போகும் மாற்றங்களை எதிர்கொள்ளும் முகமாக தயார்படுத்த வேண்டும்.
Tags: