பள்ளியில் இருந்தே பாலியல் கல்வி தொடங்க வேண்டும்... அனுஷ்கா !

பள்ளிகளில் பாலியல் கல்வியை பள்ளிகளில் கொண்டு வர வேண்டும் என்று நடிகை அனுஷ்கா கூறினார். பிரபல மேஜிக் நிபுணரான ப.சி.சர்காரின் பேத்தி டாக்டர் பியா சர்க்கார். 
பள்ளியில் இருந்தே பாலியல் கல்வி தொடங்க வேண்டும்... அனுஷ்கா !
இந்த மேஜிக் நிபுணர் டீச்எய்ட்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

மேலும் இவர் அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்ட்போர்டு யுனிவர்சிட்டியுடன் இணைந்து உலகம் முழுவதும் எய்ட்ஸ் விழிப்புணர்வை பற்றிய பிரசாரத்தை செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இவர் இந்தியாவில் பிரபல நடிகர்களின் உருவங்களை அனிமேஷனாக உருவாக்கி அதை கொண்டு எய்ட்ஸ் பிரசார படங்களை தயாரித்துள்ளார்.

இவர் தயாரித்த தமிழ் படத்தில் ஸ்ருதி ஹாசன், சித்தார்த், சூர்யா, அனுஷ்கா, ஆகியோர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். இதனுடைய  அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்கா நிருபர்களிடம் கூறியதாவது: 

நான் பெங்களூரில் படித்துக் கொண்டிருந்தபோது முதன் முதலாக எய்ட்ஸ் பற்றி கேள்விப்பட்டேன். அன்று நினைத்தேன் எய்ட்ஸ் நோயாளிகளை தொடக்கூடாது, சேர்ந்து சாப்பிடக் கூடாது என்று நினைத்திருந்தேன்.

அதன் பின்னர் 2009 ம் ஆண்டு டாக்டர் பியா சர்க்காரின் நட்பு கிடைத்தவுடன் என்னுடைய அந்த எண்ணங்கள் அனைத்தும் மாறி அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற மனப்பான்மை வந்தது.
அதனால் அவருடைய தொண்டு நிறுவனத்தில் என்னையும் இணைத்துக் கொண்டு அவருடன் சேர்ந்து நானும் பணியாற்றி வருகிறேன்.

பள்ளிகளில் இருந்தே குழந்தைகளுக்கு பாலியல் கல்வி தொடங்க வேண்டும். மேலும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பாலியல் கல்வி பற்றி விவாதிக்க வேண்டும். 

அப்படி செய்தால் எஸ்ட்சை முற்றிலுமாக விரட்டிவிட முடியும் என்று நம்புகிறேன்.

சினிமாவால்  தான் பாலியல் குற்றம் அதிகமாகி எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகிறார்கள் என்று கூறும் கருத்தை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். 

எச்ஐவி பாதிப்புக்கு அவரவர் நடத்தைகளே காரணமாக இருக்கிறது. இதில் யாரும் யார் மீதும் பழிபோட முடியாது... இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
Tags:
Privacy and cookie settings