ரசிகர்களின் கைதட்டல் எனக்கு பாராட்டு இளையராஜா !

என்னுடைய ரசிகர்களின் கைதட்டல் தான் எனக்கு பாராட்டு. அது தான் என்னுடைய வாழ்வின் அர்த்தமாகவும் கருதுகிறேன் என்று இளையராஜா தெரிவித் திருக்கிறார்.
ரசிகர்களின் கைதட்டல் எனக்கு பாராட்டு இளையராஜா !
பாலா இயக்கத்தில் வெளியான 'தாரை தப்பட்டை' திரைப்படம் இளையராஜா இசையில் 1000 வது படமாக வெளியானது. 

இப்படத்துக்காக நடத்த திட்டமிடப்பட்டு இருந்த பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா, சென்னை வெள்ள பாதிப்பால் நடை பெறவில்லை.

இந்நிலையில், தற்போது 'இளை யராஜா ஆயிரம்' என்ற பெயரில் பிப்ரவரி 27ம் தேதி ஒரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 

இவ்விழாவை IMM (இளைய ராஜா மியூசிக் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட்) நிறுவனமும், விஜய் தொலைக் காட்சியும் இணைந்து சென்னையில் நடத்த இருக்கிறார்கள். 

இவ்விழாவில் இளை யாராஜாவின் பாடல்களை பாடி அவருக்கு காணிக்கையாக சமர்ப்பித்து, சிலிர்ப்பில் ஆழ்த்த ஒட்டு மொத்த திரையுலகம் கூடவிருக் கிறார்கள்.

மேலும், ரசிகர்கள், இசைக்கலை ஞர்கள், நட்சத்திரங்கள் என திரையு லகமே கண்டிராத ஒரு விழாவாக இருக்கும் என்றும் விஜய் டிவி நிறுவனம் தெரிவித் துள்ளது. 

இவ்விழா குறித்து இளையராஜா, ஆயிரம் படங்களுக்கு இசை, என்னை பொறுத்த வரையில் ஒரு எண்ணிக்கையே. இதை வைத்து நான் கர்வப்பட முடியாது. இசை என்னுடைய வாழ்வு, 
என்னுடைய மூச்சு. என்னுடைய இசை ஒவ்வொரு ரசிகனுடைய வாழ்விலும் ஒரு அன்யோன் யத்தை ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சியே. என்னுடைய ரசிகர்களின் கைதட்டல் தான் எனக்கு பாராட்டு. 

அது தான் என்னுடைய வாழ்வின் அர்த்த மாகவும் கருதுகிறேன். என் இசைக்கு பாராட்டு என்ற போது, எனக்கு அந்த இசை கொடுத்த என் இறைவனுக்கு பாராட்டாக இருக்கும் என்று தான் இந்த வாழ்வில் நான் கலந்து கொள்கிறேன் என்று தெரிவித் திருக்கிறார்.

இவ்விழா குறித்து விஜய் தொலைக் காட்சியின் பொது மேலாளர் ஸ்ரீராம், உலகமே பாராட்டும் நமது இசைஞானிக்கு பாராட்டு விழா என்பது ஒரு மகத்தான நிகழ்வு.

இந்த விழாவை விஜய் டி.வி நடத்துவதற்கு அனுமதி அளித்த இளையராஜா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித் திருக்கிறார்.
Tags: