காப்பி ரைட் பிரச்சினை... தெறி டீசரை நீக்கிய யுட்யூப் !

காப்புரிமை பிரச்சினை காரணமாக விஜய்யின் தெறி டீசரை, வெளியான 12 மணி நேரத்துக்குள் நீக்கி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளது யு ட்யூப். அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. 
காப்பி ரைட் பிரச்சினை... தெறி டீசரை நீக்கிய யுட்யூப் !
இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத் துள்ளார். இது அவ ருடைய 50 - வது படம். தெறி படத்தின் டீசர் நேற்றிரவு வெளியிடப் பட்டது. விஜய் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத் தளங்களில் டீசரைப் பகிர்ந்து கொண்டாடி னார்கள்.

இந்நிலை யில் திடீரென இன்று காலை தெறி படத்தின் டீசரை யூடியூப் இணையத் தளம் நீக்கியது. காப்புரிமை தொடர் பாக எழுந்த சந்தேகத் தில் இந்த நடவடிக் கை எடுக்கப் பட்டதாகக் கூறப் படுகிறது.

என்று யூடியூப் இதற்கு விளக்கம் அளித்திருந்தது. அதாவது தெறி பட டீசருக்கு தமிழ் டாக்கீஸ் என்ற நிறுவனம் காப்பிரைட் பிரச்சினை எழுப்பி யதால் டீசரை நிறுத்தியதாக யுட்யூப் தெரிவித் திருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். 
காப்பி ரைட் பிரச்சினை... தெறி டீசரை நீக்கிய யுட்யூப் !
யூடியூப் இணையத் தளத்துக்குத் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தார்கள். மீண்டும்... இந்நிலையில், சில நிமிட இடை வெளிக்குப் பிறகு தெறி டீசரை மீண்டும் பதிவேற்றி யது யுட்யூப்.

ஆனால் இந்த இடைப்பட்ட நேரத்தில் யுட்யூபுக்கு வந்த விஜய் ரசிகர்களின் கண்டனக் கடிதங்கள் சிலவற்றில் அச்சிலேற்ற முடியாத அளவுக்கு ஆபாசம் தெறித்ததாம்
Tags:
Privacy and cookie settings