இந்தியாவில் ஸ்டோர்களைத் திறக்க அனுமதி கோருகிறது ஆப்பிள் !

இந்தியாவில் ஐபோன்களின் வர்த்தகம் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், முக்கிய நகரங்களில் தங்களது ஸ்டோர்களை நிரந்தரமாக அமைத்திட, அரசிடம் ஆப்பிள் நிறுவனம் அனுமதி கோரி இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.
இந்தியாவில் ஸ்டோர்களைத் திறக்க அனுமதி கோருகிறது ஆப்பிள் !
மேற்குலக நாடுகள் மட்டுமல்லாது சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப் புகளுக்கு பலத்த வரவேற்பு இருந்து வருகிறது. 

குறிப்பாக சமீபத்திய வருடங்களில் இந்தியாவில் ஆப்பிள் வர்த்தகம், அந்நிறுவனத்தின் எதிர் பார்ப்புகளைத் தாண்டி உள்ளது.

இந்நிலையில், நிரந்தரமாக ஸ்டார்களை அமைத்து, இடைத்தரக நிறுவன களுக்கு தனித்த இலாபங்கள் செல்வதைக் குறைக்க ஆப்பிள் திட்ட மிட்டுள்ளதாக தொழில்நுட்பப் பத்திரிக்கைகள் ஆருடங்கள் கூறி வருகின்றன. 

 சீனாவில் மட்டும் தற்போது 31 ஆப்பிள் ஸ்டோர்கள் இருகின்றன.
இந்தியாவில் ஸ்டோர்களைத் திறக்க அனுமதி கோருகிறது ஆப்பிள் !
அதே அளவிற்கு வர்த்தகச் சந்தைகள் கொண்ட இந்தியாவில், ஒரு ஆப்பிள் ஸ்டோர் கூட இல்லாத நிலையில், விரைவில் ஆப்பிள் ஸ்டோர்கள் முக்கிய நகரங்களில் திறக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்ப டுகிறது. 

எனினும், இது பற்றி ஆப்பிள் நிறுவனம் எவ்வித தகவல்க ளையும் இதுவரை வெளியிட வில்லை.
Tags:
Privacy and cookie settings