சென்னையில் பின்னணி பாடகி மர்ம மரணம் | Mysterious death of playback singer in Chennai ! சென்னையில் பின்னணி பாடகி மர்ம மரணம் | Mysterious death of playback singer in Chennai ! - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

சென்னையில் பின்னணி பாடகி மர்ம மரணம் | Mysterious death of playback singer in Chennai !

'எங்கேயும் எப்போதும்', ‘ பறவை' உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ள பின்னணி பாடகி ஷான், சென்னை யில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறை யில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
அவரது உடலை கைப்பற்றிய போலீஸார், ஷான் கொலை செய்யப் பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகி றார்கள். மலையாள திரை உலகில் பிரபல இசையமைப் பாளரான ஜான்சன் மாஸ்டர் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு கால மானார்.

இவரது மகளான ஷான் (வயது 31) திருமணம் ஆகி கணவரை பிரிந்து சென்னை அசோக் நகரில் வசித்து வந்தார். மயிலாப்பூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் மார்க் கெட்டிங் மேலா ளராக பணி புரிந்து வந்தார்.

தமிழில் எங்கேயும் எப்போதும் மற்றும் பறவை ஆகிய படங்களில் ஷான் பாடியு ள்ளார். வியாழக் கிழமை இரவு தன்னுடைய உறவி னர்களிடம் ஷான் செல்போ னில் நன்றாக பேசியுள்ளார். இரவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் உறங்க சென்ற அவர், நேற்று மாலை நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை திறந்து பார்த்த போது, ஷான் மர் மமான முறையில் இறந்து கிடந்தார்.

உடல் முழுவதும் கருப்பு நிறமாக மாறி இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், அவருக்கு வலிப்பு நோய் இருந்த தாகவும் கூறப்ப டுகிறது. இதுகுறித்து அசோக் நகர் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.