பாலிவுட் ஹீரோக்கள் செய்வதை ஏன் நம் ஹீரோக்கள் செய்வதில்லை !

தமிழ்த் திரையுலகத்தில் இன்னும் சில ஹீரோக்கள் தங்களை மாற்றிக் கொள்ளாமலே இருக்கிறார்கள். ஹிந்தித் திரையுலகத்தைப் பார்த்து பல விஷயங்களைக் காப்பியடிப்பார்கள்,
பாலிவுட் ஹீரோக்கள் செய்வதை ஏன் நம் ஹீரோக்கள் செய்வதில்லை !
சில விஷயங்களை மட்டும் அவர்கள் செய்வதைப் போல செய்ய மாட்டார்கள். 

அதில் முக்கியமான ஒன்று படங்களின் பிரமோஷனுக்கு வருவது. ஹிந்தியில் சல்மான் கானாக இருந்தாலும் சரி, ஷாரூக்கானாக இருந்தாலும் சரி, 

ஆமீர் கானாக இருந்தாலும் சரி அவர்கள் படங்கள் வெளியாகிறது என்றால் பட வெளியீட்டிற்கு முன்னதாகவே ஒரு சேனல் விடாமல் 

அனைத்து சேனல்களின் முக்கிய பிரபலமான நிகழ்ச்சிகளில் தங்கள் படங்களைப் பற்றிய பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்வார்கள்.

முக்கிய இணையதளங்கள் அனைத்திலும் கூட வீடியோ பேட்டிகளைக் கொடுப்பார்கள். 
பத்திரிகைகளுக்குப் பேட்டி என எந்தெந்த வழிகளில் அவர்களது படத்தை விளம்பரப் படுத்த முடியுமோ அப்படி விளம்பரப் படுத்துவார்கள். 

அதன் பின் படம் நன்றாக இருந்தால் அந்த பிரமோஷன்கள் அந்தப் படத்திற்கு மிகப் பெரிய ஓபனிங்கைக் கொடுத்து விடும். ஆனால், தமிழில் விஜய், அஜித் போன்ற ஹீரோக்கள் அப்படிப் பண்ணுவதே இல்லை. 

மற்ற ஹீரோக்களும் பெரிய சேனல்களுக்கு மட்டுமே பேட்டி, பெரிய பத்திரிகைகளுக்கு மட்டுமே பேட்டி என வித்தியாசம் பார்க்கிறார்கள். 
விஜய்யாவது அவருடைய படத்தின் இசை வெளியீடு, மற்ற விழாக்கள் ஆகியவற்றில் கலந்து கொள்வார். ஆனால், அஜித் அவருடைய எந்தப் பட நிகழ்ச்சிக்கும் வந்ததே கிடையாது. 

புலி படத்தைப் பொறுத்த வரையில் விஜய் இசை வெளியீடு தவிர வேறு எந்த டிவிக்கும் பேட்டி, பத்திரிகைக்கு பேட்டி என எதையுமே கொடுக்க வில்லை.

சமீபத்தில் நயன்தாரா அவர் நடித்த ‘மாயா’ படத்தின் எந்த பிரமோஷன் நிகழ்ச்சிக்கும் வரவில்லையே என்று கேட்ட போது 

அவர் மீது நடவடிக்கை எடுப்பதைப் பற்றி கலந்து பேசுவோம் என படத்தைத் தெலுங்கில் வெளியிட்ட கல்யாண் ‘மாயா’ பட வெற்றிச் சந்திப்பில் தெரிவித்தார். 

நயன்தாராவை விடுங்கள், முதலில் விஜய், அஜித் போன்றவர்கள் அவர்களது பட பிரமோஷன்களில் கலந்து கொள்ள வைப்பதை அவர்களின் படத் தயாரிப்பாளர்கள் நிர்ப்பந்திப்பார்களா?
இப்போது அவர்கள் வழியில் ஜெய், பாபி சிம்ஹா போன்ற இன்னும் வளராத ஹீரோக்களும் ஆரம்பித்து விட்டார்கள்,

அவர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் கதி என்னாவது?. டிவி பேட்டிகளை விடுங்கள், தாங்கள் படம் சார்ந்த விழாக்களுக்கு அவர்கள் முதலில் வரட்டும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
Tags:
Privacy and cookie settings