தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளைத் தாக்கும் சிகா வைரஸ் !

பெண்ணின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளைத் தாக்கி, மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் சிகா வைரஸ், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 
தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளைத் தாக்கும் சிகா வைரஸ் !
கடந்த சில வாரங்களாக, தென் அமெரிக்க கண்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை உண்டாக்கி வரும் சிகா வைரஸ் தாக்குதல் ஏராளமான குழந்தைகளை பாதிப்படைய செய்து, பெரும் அதிர்ச்சியை உண்டாக் கியுள்ளது.

மேலும் இந்த சிகா வைரஸ், தொற்று நோய் கொசுக்களால் பரவும் என்றாலும் பாலுறவு மூலமும் பரவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர். 

இதனால் வரும் 2018-ம் ஆண்டு வரை பெண்கள் கருத்த ரிக்க வேண்டாம் என்று பிரேசில், கொலம்பியா, எல்-சல்வடோர் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கருவில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் இந்த நோயின் அறி குறிகளைக் கூட இதுவரை அறிய முடியாதது மருத்துவ உலகத்திற்கு புதிய சவாலாக உள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் தலை, மிகச் சிறியதாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறும் நிபுணர்கள், வெளியில் தெரியாமலும் இந்த வைரஸ் குழந்தைகளை தாக்கக் கூடியது என்றும் எச்சரித் துள்ளனர்.

இதனை யடுத்து சிகா வைரஸ் நோய் கிருமிகளை கண்டறிந்து தடுக்கும் மருந்துகள் குறித்து அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் ஆய்வு மேற்கொண் டுள்ளனர். 

பிரேசில், கொலம்பியா, எல் சல்வடோர் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் வைரஸ் பரவலால் பெரிதும் அச்சம் நிலவி வருகிறது.

அந்த வைரஸ் தொற்று பரவியிரு க்கும் நாடு ஒன்றில் இருந்து, அமெரிக்கா திரும்பிய வெர்ஜினி யாவை சேர்ந்த ஒருவருக்கு அந்த வைரஸ் இருப்பது, கடந்த செவ்வா யன்று கண்டு பிடிக்கப் பட்டது.
பிறக்கும் குழந்தை களில் குறைபா டுகளை ஏற்படுத்தக் கூடிய சிகா வைரஸை தடுக்கும் தடுப்பு மருந்துகள், அதற்கான சிகிச்சைகள் குறித்து விரைவாக 

கண்டுபிடிக்கு மாறு அதற்குரிய தீவிர நடவடிக் கைகளில் ஈடுபடுமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத் துள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்தியாவில் ஏற்கெனவே டெங்கு, சிக்குன் குனியா போன்ற தொற்று நோய் தாக்குதல்கள் பரவலாக உள்ளன. அதிலும் தமிழகத்தில் அவ்வப் போது இந்தக் காய்ச்சலுக்கு உயிரிழ ப்புகளும் நடக்கின்றன. 

இத்தகைய சூழ்நிலை யில்,மேலும் ஒரு வைரஸ் தொற்று நோய் ஆபத்து நிலவுவது கவனிக்க த்ததக்கது. 
இதனிடையே இந்தியா போன்ற 23 நாடுகளு க்கு சிகா வைரஸ் நோய் எச்சரிக்கை உலக சுகாதார நிறுவன த்தால் விடுக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings