இனி முதுகை மறைக்க தேவை இல்லை !

குளிக்கும் போது நாம் அதிகம் கவனம் செலுத்தாத பகுதி முதுகு. இதனால் பொதுவாக முதுகுப் பகுதி அழகிழந்து, மங்கலாக தோற்றம் அளிக்கிறது.

அழகான முதுகு தெரியும் வகையில் பிறர் அணியும் உடைகளைப் பார்த்து நீங்கள் இனி பொறாமை பட வேண்டாம்!

இதோ உங்கள் முதுகு அழகு பெற சில குறிப்புகள். வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும்.

உலர்ந்த பிறகு கழுவிவிட வேண்டும். இது முதுகிற்கு நல்ல பொலிவை தரும். முதுகை `ஸ்க்ரப்’ செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும்.


இந்த குறிப்புகளை பின்பற்றினால், அடுத்த முறை ஷாப்பிங் போகும் போது முதுகை மறைக்கும் உடைகளை தேர்ந்தெடுக்க அவசியமில்லை!
Tags: