சானிட்டரி நாப்கின் உபயோகித்தால் புற்றுநோய் வருமா?

கிராமப் புறங்களில் வசிக்கிற பெண்களுக்கு மாதம் தோறும் இலவச சானிட்டரி நாப்கின் கள் வழங்கும் தமிழக அரசின் அதிரடி அறிவிப் புக்கு அமோக ஆதரவு!


அதே நேரத்தில், இப்படியொரு நல்ல சேதியின் சந்தோஷ த்தைக்கூட அனுபவிக்க விடாமல், பீதியைக் கிளப்பியி ருக்கிறது சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்பு பற்றி நாம் கேள்விப் படுகிற அதிர்ச்சித் தகவல்கள்...  ஆமாம்!

வருடக்க ணக்காக சானிட்டரி நாப்கின்கள் உபயோ கிக்கிற பெண்க ளுக்கு அலர்ஜி, புண், அரிப்பு, இன்ஃபெக்ஷ னில் ஆரம்பித்து, கர்ப்பவாய் புற்று நோய் கூட வரலாம் என்பதே அந்த ஷாக் ரிப்போர்ட்!

‘எங்கள் சானிட்டரி நாப்கினை உபயோகி த்தால் சந்திர மண்டலத்துக்கே சென்று வரலாம்; இமய மலையில் ஏறி எட்டிப் பார்க் கலாம்’ என்கிற ரீதியில் கவர்ச்சி யான விளம்பர ங்களைச் செய்கின்றன பல நிறுவன ங்களும்... 

எப்பேர்ப் பட்ட ரத்தப் போக்கையும் உறிஞ்சிக் கொண்டு, பல மணி நேரம் தாக்குப் பிடிப்பதாக உத்தர வாதங்கள் வேறு...

அதீத ரத்தப் போக்கு, அலர்ஜி, புண், தடிப்பு என மாத விலக்கு தொடர்பான பிரச்னை களுக்காக ஒரு பெண் யாராவது ஒரு டாக்டரை சந்திக்கிற போது, 

‘இந்த எல்லாப் பிரச்னை களுக்கும் காரணம், அந்தப் பெண் வருடக் கணக்கில் உபயோ கிக்கிற நாப்கினாக இருக்கலாம்’ என்று சந்தேகம் கூட வருவ தில்லை. 

அந்த அளவுக்கு டாக்டர்க ளுக்கே விழிப் புணர்வு தேவைப் படுகிற பிரச்னை இது என்கிறார்கள் நிபுணர்கள்.

 சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் பயன் படுத்தப்படும் பலவித கெமிக்க ல்களின் விளைவே, மேலே சொன்ன பல பிரச்னை களுக்கும் அஸ்திவாரம். 

அட... இதற்கே பயந்தால் எப்படி? தரக் குறைவான சில நாப்கின் களில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மெட்டீரியலை க்கூட சேர்த்து தயாரிப்ப தாகவும், அதன் விளைவாக பெண்க ளுக்கு ரத்தப்போக்கு அதிகரிப் பதாகவும் கூட ஒரு செய்தி!

இந்தப் பிரச்னை பற்றிப் பேச பல மருத்து வர்களும் தயாராக இல்லாத நிலையில், திருச்சி தேசியக் கல்லூரி யின் உயிர் தொழில் நுட்பவியல் துறை துணைப் பேராசிரியர் முகமது ஜாபீர்,

மறைக்கப் படுகிற பல ரகசியங் களையும் வெட்ட வெளிச்சமா க்குகிறார். ‘‘சராசரியா ஒரு பெண் தன்னோட 15வது வயசுல பருவமடை யறாங்கன்னு வச்சுப்போம்.


40 வயசுல மெனோ பாஸ்னு வச்சுக்கிட்டா, அந்தப் பெண் தன்னோட வாழ்க்கைல குறைந்த பட்சம் 25 வருஷங்கள்... 300 முறைகள்... 900 நாள்கள்... ரத்தப் போக்கை சந்திப்பாங்க.

பெண் உடம்பின் ரொம்ப சென்சிட்டிவான பகுதியில அத்தனை வருடங்களா உபயோகிக்க ப்படற நாப்கின்கள், அலர்ஜி, அரிப்பு, புண், இன் ஃபெக்ஷன் உள்பட ஏகப்பட்ட பிரச்னை களுக்குக் காரணமாகுது.

அதுக்குக் காரணம் நாப்கின் தயாரிப்புல சேர்க்கப்படற சில கெமிக்கல்கள்... முதல் குற்றவா ளின்னு பார்த்தா டையாக்சின். 

புற்றுநோய் உண்டாக்கற அதை, நாப்கின் தயாரிப்புல நேரடியா உபயோகிக் கிறதில்லை. பல தயாரிப்பா ளர்களும் ரீசைக்கிள் செய்யப் பட்ட பேப்பர் மற்றும் பொரு ள்களைக் கொண்டு தான் நாப்கின் தயாரிக் கிறாங்க.

அப்படித் தயாரிக்கப் படற நாப்கின்கள், பழுப்பு அல்லது அழுக்கு நிறத்துல இருக்கும். நம்ம ஆட்க ளுக்கு சாப்பிடற அரிசிலே ருந்து சகலமும் வெள்ளை வெளேர்னு இருந்தா தான் திருப்தி. நாப்கினும் அப்படித் தான். 

அந்த பழுப்பு நிறத்தை மாத்தி, சலவை செய்தது போன்ற பளீர் வெள்ளை நிறத்தை வரவைக்க றதுக்காக, தயாரிப்பா ளர்கள் ஒரு விதமான பிளீச் பயன்ப டுத்தறாங்க. பிளீச் செய்த பிறகு நாப்கின் களை மறுபடி அலச முடியாது. 

அப்படியே அது பெண்களோட உபயோ கத்துக்கு வந்துடும். நீக்கப் படாத அந்த பிளீச்லே ருந்து ‘டயாக்சின்’ கொஞ்சம் கொஞ்சமா வெளியேறிக் கிட்டே இருக்கும்.

மென்மை யான, நாசுக்கான உடல் திசுக்கள்ல பட்டு பட்டு, அந்த இடத்துல அரிப்பு, அலர்ஜினு ஆரம்பிக்கும்.

வருஷக்க ணக்குல இது தொடரும்போது, புற்று நோயா மாறும் அபாயம் ரொம்ப அதிகம்.

ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்கறதா உத்தர வாதம் தரும் பல கம்பெனி களோட நாப்கின் கள்லயும் பிரதான பொருள் செல்லு லோஸ் ஜெல். இது இயற்கையா பெறப்படற ஒன்று தான்.

 

ஆனாலும், அதை மிக நுண்ணிய இழைகளா, துகள்களா மாத்தற துக்காக அதிகக் காரத் தன்மை கொண்ட கெமிக்க ல்களை உபயோகி க்கிறாங்க.

அப்படிப் பல கட்டங் களைக் கடக்கிறப்ப, அதோட நல்ல தன்மைகள் மறைஞ்சு, கெமிக்கல் களோட ஆதிக்கம் தூக்கலாகி, பிரச்னை களுக்கு விதை போடுது.

மூணாவது குற்றவாளி, ரேயான். உலர்வான உணர்வைத் தர்றதா சொல்ல ப்படற நாப்கின் கள்ல இதுதான் சேர்க்கப் படுது.

துணிகளை நெய்யப் பயன் படுத்தற ரேயானும், பலமுறை பதப்படுத்தப் பட்டு, கிட்டத் தட்ட செயற்கைப் பொருள் மாதிரியே மாத்தப்படுது.

சருமத்துக்கு சுவாசிக்க வழியில் லாமப் போறதோட, இன்ஃபெக்ஷனு க்கும் இது வழி வகுக்குது’’ என்கிற முகமது ஜாபீர், நாப்கின் உபயோகிப் பவர்களுக்கு சில அட்வை ஸ்களைச் சொல்கிறார்.

தான் உபயோகி க்கிற பிராண்ட் என்ன, அந்த நாப்கின்ல என்னல்லாம் சேர்த்து செய்யப் பட்டிருக்குனு ஒவ்வொரு த்தரும் தெரிஞ்சுக்கணும். 

குறிப்பிட்ட அந்த பிராண்ட் உபயோ கிக்க ஆரம்பிச்ச பிறகு தனக்கு ஏதாவது பிரச் னைகள் வந்திரு க்கான்னு பார்க்கணும்.

சிறுநீரகத் தொற் றாகவோ, அரிப்பு, அலர்ஜி யாகவோ இருந்தாலும் சாதாரணம் என அலட்சியப் படுத்த வேண்டாம்.

உடனடியா அந்த பிராண்டை நிறுத்திட்டு, விலை அதிகமா னாலும் தரமான தயாரிப்பை உபயோகி க்கணும்.

ரத்தம் ரொம்ப ரொம்ப சத்தான ஒரு பொருள். அது ரொம்ப நேரம் தேக்கி வைக்கப் படறப்ப, பாக்டீரியா க்களுக்கு கொண்டா ட்டம். சீக்கிரமே பெருகி, இன்ஃபெக்ஷனை தரும். 

அதனால 3 மணி நேரத்துக் கொரு முறை நாப்கினை மாத்திடணும். கொஞ்சம் அசவுகரி யமானது தான்... ஆனாலும் வீட்லயே சுத்தமான, சுகாதா ரமான முறைல தயாரிக்கிற துணி நாப்கின்கள் ரொம்பவே பெஸ்ட்!’’
Tags: