தாய்ப்பாலும், குழந்தையின் பதட்டமும் !

தாய்ப்பால் குழந்தைக்கான ஒரு அற்புதமான உணவு என்பதும், அதற்கு இணை யான மாற்று உணவு உலகிலேயே இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.

 

குழந்தைக்கு ஒவ்வாமை நோய் வராமல் காக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரி க்கிறது, அதிக அறிவுடன் வளர உதவுகிறது,

வைரஸ் பாக்டீரியா தாக்குதலி லிருந்து காக்கிறது என்றெல்லாம் தாய்ப்பா லில் மகத்துவம் குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் பல்வேறு வடிவங் களில் இது வரை வெளி வந்திருக் கின்றன.

கூடவே தாயின் உடல் எடை யிழப்புக்கு உதவுகிறது எனவும், தாய்க்கு புற்று நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது எனவும்,

எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது எனவும் பாலூட் டுதலின் பயன் களையும் அறிவியல் நிரூபித் துள்ளது.

இப்போது பிரிட்டனில் நிகழ்த்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பள்ளி செல்லும் போது பதட்ட மில்லாமல் செயல் படுவார்கள் எனவும், 

மன அழுத்த த்தைத் தாங்கும் வலிமை படைத்த வர்களாக இருப் பார்கள் எனவும் புதிய ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுமார் 9000 குழந்தைகளை வைத்து நடத்தப் பட்ட இந்த ஆய்வு தாய்ப்பாலின் தேவையை இன்னொரு பரிமாண த்தில் முக்கிய த்துவப் படுத்துகிறது.

சமூகத்தின் சூழலை ஏற்று உள்வாங்கி செயல்படு தலுக்கும், பரிச்சய மற்ற சூழலில் கூட பதட்ட மில்லாமல் செயல்படு வதற்கும் வேண்டிய மன தெளிவை குழந்தை களுக்கு தாய்ப் பாலின் சக்தி வழங்குகிறது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இது பாலூட்டும் போது நிகழும் தாய்க்கும் குழந்தை க்கும் இடை யேயான தொடுதல் உறவி னாலோ, அல்லது பாலில் இருக்கும் உன்னத சக்தியினாலோ நிகழ்ந்தி ருக்கலாம்.

எப்படி யெனினும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பள்ளிக் காலங்களில் ஏற்படக் கூடிய பதட்டம், மன அழுத்தம் அனைத் தையும் எளிதில் கடந்து விடுகின் றனர் என்பது மட்டும் திண்ணம்.

தாய்ப்பால் ஊட்டவேண்டுமா, வேண்டாமா என யோசிக்கும் தாய்மார் களுக்கு இந்த ஆய்வு முடிவு ஒரு வழி காட்டியாய் இருக்கும்.
Tags: