புற்று நோய் பற்றிய விரிவான தகவல்கள் !

புற்று நோய் பற்றிய விரிவான தகவல்கள் !

யாருக்கு வேண்டு மானாலும் வரலாம். எப்போது வேண்டு மானாலும் வரலாம் என்று பலரையும் பயமுறு த்திக் கொண்டி ருக்கும் நோய்களில் ஒன்று தான் புற்று நோய்.
ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர் வுடன் இருக்க வேண்டிய நோய். தொடக்க த்திலே கண்டு பிடித்தால் 95 சதவீதம் குணப் படுத்தி நிம்மதியாக வாழ முடியும்.

இந்த நோய்க்கு இப்போது வியக்க வைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவி களும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன. அதனால் தரமான சிகிச்சை யால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப் பிருக்கிறது.

ஆனால் அறிகுறிகளை அலட்சியப் படுத்தி விட்டு கண்டு கொள்ளா மலே இருந்தால் மட்டுந் தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகி விடுகிறது.

புற்று நோய்க்கு என்ன காரணம்? 


பல காரண ங்கள் இருக்கின்றன. பாரம் பரியத் தாலும் வரும். பழக்க வழக்கங் களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில் படும் சூரிய ஒளியாலும் வரும்.

ஆண்களுக் கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக் கென்று சில புற்று நோய்களும், இரு பாலருக்கும் என்று பொதுவான புற்று நோய்களும் உண்டு.


இந்த நோய்க் கான அறிகுறிகள் என்னென்ன? உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறி குறிகள் இருக்கி ன்றன.

நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறி குறிகள் மாறும். ஆயினும் பொதுவாக 10 அறி குறிகள் உள்ளன.

அவை: குணமா காத புண். ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப் போக்கு. சளியில் ரத்தம் வெளிப்படுதல். கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது. மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல். கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம். திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல்.

(குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்க ளுக்கு) மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல். உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம். திடீரென்று தோன்றும் அதிக மலச்சிக்கல். எந்தெந்த பகுதியில் ஏற்படும்

புற்றுநோய்க்கு என்னென்ன காரணங்கள்?


வாய் புற்று: 

புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.

நுரையீரல் புற்று: 

புகைப் பிடித்தல், ஆஸ் பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற் சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்க ளுக்கு.


வயிற்றுப் புற்று: 

மது அருந்துதல், புகைப் பிடித்தல், வறுத்த- பொரித்த  உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.

ஈரல் புற்று: 

மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று. மார்புப் புற்று: குழந்தை யில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடு த்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.

கருப்பை புற்று: 

அதிகமாக குழந்தை பெற்றெடு த்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவா காமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டு பிடிக்கப்பட்டு விட்டது. வெளி நாடுகளில் இப்போது பயன்படுத் தப்பட்டுக் கொண்டி ருக்கிறது).


சரும புற்று: 

சருமத்தில் அதிக அளவு வெயில் படுதல், சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாள்பட்ட ஆறாத புண். (இந்தெந்த புற்று நோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப் பட்டாலும், பிரச்சினைக் குரிய பழக்கமே இல்லாத ஒருவருக்கு கூட இந்த நோய் ஏற்படலாம்.

மது அருந்த மாட்டார். புகைப் பிடிக்கும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்று நோய் வந்து விட்டதே' என்று வருந்திப் பயனில்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங் களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டி ருக்கலாம்)

இந்த புற்றுநோய்களை தடுக்க முடியுமா? 

தடுக்க முயற்சி க்கலாம். மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இரு ந்தால் முடிந்த அளவு தடுக்கலாம் தானே! குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்

என்றால் புகையிலை, மது, புகைப் பிடித்தல், பான்பரக் பயன் படுத்துதல் போன்ற வைகளை தவிர்த்தி டுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி- எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ் கோபி

அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்ற வைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை. என்பதை டாக்டர் சொல்வார். அதை வைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.


கண்டு பிடித்து விட்டால், குணப்படுத்தி விட முடியுமா? 

ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து விட்டால் 95 சதவீதம் குணப்படுத்தி விடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும்.


முற்றிய நிலை என்றால் குணப் படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக் குரிய விஷயம் என்ன வென்றால் சில வகை புற்று நோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப் படுத்த அதிக வாய்ப் பிருக்கிறது. இதற்கு பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர் என்று பெயர்.

சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற்படும் புற்று போன்ற வையாகும்.

புற்று நோயை குணப்படுத்த ஆபரேஷன் செய்து கொள்வது அவ்வளவு நல்ல தில்லை என்பது சரியா? 

காலம் மாறிக் கொண்டிரு க்கிறது. நவீன ஆபரேஷன் முறைகளும் கருவி களும் வந்து கொண்டிரு க்கின்றன.

மருத்துவ நிபுணர் களும் உருவாகிக் கொண்டிருக்கி றார்கள். 30, 40 வருடங்க ளுக்கு முன்னால் புற்று நோய்க்கு மேஜர் ஆபரே ஷன்கள் செய்யப் பட்டுக் கொண்டி ருந்தன.


இப்போது எளிதான ஆபரேஷ ன்கள் செய்து, நவீன மருந்து- நவீன தெரபிகள் கொடுக்கப் படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களு க்கான ஆபரேஷன் களோடு ஒப்பிடும் போது புற்று நோய்க்கான ஆபரேஷன் சற்று ரிஸ்க் தான். இருந்தாலும் பயப்பட வேண்டிய தில்லை.

புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் என்னென்ன?

மூன்றுவிதமான சிகிச்சைகள் கையாளப் படுகின்றன. அவை:

1. ஆபரேஷன்,

2. கீமோ தெரபி(மெடிக்கல் ட்ரீட்மென்ட்),

3. ரேடியேஷன்(எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்).
Tags: