டெல்லியில் முதல்முறையாக மகளிர் மட்டும் மதுக்கடை திறப்பு !

நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கான மதுக்கடை திறக்கப் பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருகிறது.
டெல்லியில் முதல்முறையாக மகளிர் மட்டும் மதுக்கடை திறப்பு !
இதே போல், காற்று மாசு, போக்கு வரத்து நெரிசல் போன்று பல்வேறு இயற்கைக்கு எதிரான விஷயங்களிலும் முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலை யில், டெல்லியில் உள்ள ஸ்டார் சிட்டி மாலில், பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் மதுக்கடை ஒன்று திறக்கப் பட்டுள்ளது. மேலும், 

இந்த கடையின் விற்பனையாளர், உதவியாளர் உள்பட அனைத்திற்கும் பெண்களே நியமிக்கப் பட்டுள்ளனர்.

இங்கு அனைத்து வகையான மது வகைகள் பெண்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழக த்தில் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த காந்திய வாதி சசிபெ ருமாள் மரணத்திற்கு பிறகு டாஸ்மாக்கை மூடக்கோரி 

பல்வேறு அரசியல் கட்சிகள், சமூகநல ஆர்வலர்கள் மற்றும் மாண வர்கள் என அனைத்து தரப்பி னரும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வரும் தேர்தல் வாக்கு றுதியாக டாஸ் மாக்கை மூடுவோம் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன. ஏற்கனவே, கேரளாவில் மது விலக்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. 

கொஞ்சம் கொஞ் சமாக மது இல்லாத மாநிலமாக கேரளாவை மாற்றுவேன்’ என அம்மாநில முதல்வர் கூறி இருக்கிறார். 

இதே போல், சமீபத்தில் பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமாரும், ஏப்ரலில் இருந்து மதுவிலக்கு அமல் படுத்தப்படும் என கூறியிருந்தார்.
டெல்லியில் முதல்முறையாக மகளிர் மட்டும் மதுக்கடை திறப்பு !
இது போன்று நாட்டின் பல்வேறு பகுதி களில் மதுவுக்கு எதிரான போராட்ட ங்களும், குரல்களும் வலுப் பெற்று வரும் சூழ் நிலையில்,

தலைநகர் டெல்லியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வாங்கும் வகையில் மதுபான கடை திறக்கப் பட்டிருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings