மில்லியனோரை கவர்ந்த ஒரு கால் இல்லாத போலீசார் !

ஸீ குய்மிங் எனும் இப்பொலிஸ் உத்தியோகத்தர் 26 வயதானவர். 9 வயதில் வீதி விபத்தொன்றில் சிக்கி தனது ஒரு காலை இழந்தார். 
மில்லியனோரை கவர்ந்த ஒரு கால் இல்லாத போலீசார் !
செல்லிடத் தொலைபேசி பழுது பார்க்கும் தொழிலை ஆரம்பித்த அவர், தொலைபேசிகளை விற்கும் இரு நிறுவனங்களின் உரிமையாளராக விளங்குகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் அவர் தொண்டர் அடிப்படையில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தராக பணியாற்றுவதற்கு விண்ணப்பித்தார். 

எதிர் பார்த்ததைப் போலவே அவரை பொலிஸ் திணைக்களம் நிராகரித்தது. எனினும், மீண்டும் மீண்டும் விண்ணப்பங்களை அனுப்பிக் கொண்டிருந்தார் ஸீ குய்மிங். 

தான் விபத்தினால் பாதிக்கப்பட்டு காலை இழந்ததால் தனது அனுபவமானது மற்றவர்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை வலியுறுத்துவதற்கு உதவும் என அவர் தெரிவித்தார்.
இறுதியில் அவர் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். 

குய்மிங் பணியில் ஈடுபடும் காட்சி அடங்கிய வீடியோ சீன சமூக வலைத்தள மொன்றில் வெளியிடப்பட்ட போது 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் அதை லைக் செய்துள்ளனர்.
Tags: