என்னை நடிகை ஆக்கியது தமிழ் சினிமா எமி ஜாக்சன் | Tamil cinema actress Amy Jackson made me !

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் ‘பிசி’யாக நடித்துக் கொண்டி ருப்பவர் எமிஜாக்சன். அவர் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
தங்கமகன் படத்தில் தனுசுடன் நடித்தது ஜாலியான அனுபவம். நான் நன்றாக நடிப்பத ற்கு அவர் உதவினார். எந்த மொழி படமாக இருந் தாலும் சமாளித்துக் கொள்வேன்.

வசனங் களைப் புரியும்படி எழுதி வைத்துக் கொண்டு படிக்கிறேன். என்னை நடிகை ஆக்கியது தமிழ் படம் தான். முதலில் மொடலிங். விளம்பரப் படங்களில் நடித்தேன். ‘மதராச பட்டினம்’ படத்தின் மூலம் நடிகை ஆனேன்.

இது தவிர தமிழில் தாண்டவம், ஐ, தங்கமகன் படங்கள் திரைக்கு வந்துள்ளன. ‘கெத்து’ வெளி யாகத் தயாராக இருக்கிறது. விஜய்யுடன் ‘தெறி’, ரஜினியுடன் ‘2.0’ படங்களில் நடித்து வருகிறேன். தமிழ் இரசிகர்கள் மீது நான் அளவு கடந்த அன்பு வைத்தி ருக்கிறேன்.

அவர்க ளுடைய ஆதரவுக்கு என்றும் கடமைப் பட்டுள்ளேன். என்னை இந்தியப் பெண்ணா கவே நான் பார்க்கிறேன். சென்னை யில் எனக்குப் பிடித்த இடம் மெரீனா கடற்கரை. புதுச்சேரியும் எனக்கு மிகவும் பிடித்தமான இடம். 

தங்கமகன், தெறி படங்களில் சமந்தாவுடன் இணைந்து நடித்தேன். அவர் பழகுவ தற்கு இனிமை யானவர். ‘கெத்து’ படத்தில் எனக்கு ஐயங்கார் பெண் வேடம். இயக்குனர் திருக்குமரன் எனது நடை, உடை, பாவனை அனைத் தையும் மாற்றி விட்டார்.

இதில் நான் உதய நிதிக்குச் சரியான ஜோடியாக இருப்பேன் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் அனுபவித்து நடித்திரு க்கிறேன். இரசிகர்களு க்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.எனத் தெரிவித் திருந்தார்.
Tags:
Privacy and cookie settings