சவுதி அரேபிய இளம்பெண்கள் செய்த சாதனை !





சவுதி அரேபிய இளம்பெண்கள் செய்த சாதனை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
சவுதி அரேபியாவின் இளம்பெண்கள் ஒன்றிணைந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் பொருட்டு கின்னஸ் சாதனை நிகழ்வை நடத்தியுள்ளனர். 


சவுதி அரேபியா அரசியல் வரலாற்றில் முதன் முறையாக அங்குள்ள பெண்கள் அனைவரும் நடைபெற்ற தேர்தலில் வாக்களித்த கடந்த 12- ஆம் திகதி, இந்த கின்னஸ் சாதனையும் படைத்துள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் வாக்களித்த நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் ரியாத் மாநகரில் அமைந்துள்ள நவுரா பல்கலைக்கழகத்தின் உதைப்பந்து அரங்கில் குவிந்துள்ளனர். 

அங்கு இளஞ்சிவப்பு நிறத்தினாலான சால்வையை தலையில் அணிந்துகொண்டு ரிப்பன் வடிவில் அமர்ந்துள்ளனர். இந்த சாதனை நிகழ்வில் ஒட்டுமொத்தமாக 8,264 சவுதி அரேபிய இளம்பெண்கள் பங்கேற்றுள்ளதாக உலக கின்னஸ் சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது.

தூய்மையான ஆரோக்கியமே வருங்காலத்திற்கு மிகவும் முக்கியமானது என இந்த நிகழ்விற்கு ஊக்கமளித்து ஆதரவும் தெரிவித்த இளவரசி Reema Bint Bandar தெரிவித்துள்ளார். 
இந்தியாவில் 6,847 பெண்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ரிப்பன் வடிவமே இதுவரை முறியடிக்கப்படாத கின்னஸ் உலக சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை சவுதி இளம்பெண்கள் ஒன்றிணைந்து முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: