அகோர மனிதர் உலக அழகனாக தெரிவு !

ஜிம்பாப்வே நாட்டின் அகோர அழகனாக மைசன் சேரே(42) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 500 அமெரிக்க டாலர் மற்றும் அந்நாட்டின் அகோர அழகன் படத்துக்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் பங்கேற்ற இவர்,

அகோர மனிதர் உலக அழகனாக தெரிவு !
இதர ஐந்து போட்டியாளர்களை பின்னுக்குத்தள்ளி அகோர அழகனாக முடி சூட்டிக் கொண்டார். இதற்கெல்லாம் ஒரு போட்டி தேவையா? என்று யாரும் கருதிவிட வேண்டாம்.
பல பற்களை இழந்த வாய், கிழிந்த கந்தலாடையில் அலங்கோலமாக வந்த மைசன் சேரேவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் வந்த வில்லியம் மஸ்வினுவுக்கு 100 அமெரிக்க டாலர்கள் பரிசாக அளிக்கப்பட்டது. 
அகோர மனிதர் உலக அழகனாக தெரிவு !
இதில் திருப்திப்படாத அவர், ’இந்த போட்டியின் நடுவர்கள் தவறு செய்து விட்டனர். இந்த பட்டத்தை எனக்கு தான் அவர்கள் வழங்கியிருக்க வேண்டும். 
எனவே, வேறு நடுவர்களை வைத்து மறுதேர்வு செய்ய வேண்டும்’ என்று சண்டைபோடும் அளவுக்கு ஜிம்பாப்வேயில் இந்த அகோர அழகன் போட்டி பிரபலம் அடைந்துள்ளது.

கடந்த மூன்றாண்டுகளாக இந்தப் போட்டியை ஜிம்பாப்வே நாட்டில் நடத்திவரும் டேவிட் மச்சோவா என்பவர், 
அகோர மனிதர் உலக அழகனாக தெரிவு !
அகோரத்திலும் ஒரு அழகு இருக்கத் தான் செய்கிறது என்பதை உணர்த்தும் நோக்கத்தில் இதை நடத்தி வருவதாக கூறுகிறார்.
விரைவில், உலக அளவில் இதைப் போன்ற ஒரு பெரிய போட்டியை நடத்தும் திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings