கடந்த சில வாரமாக நடிகர் கார்த்திக் மூட்டுவலியால் பாதிக்கப்ப ட்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட கார்த்திக் குக்கு காலில் அறுவை சிகிச்சை மேற் கொள்ளப் பட்டது.
அப்போது, அவரது உடல்நலம் குறித்த செய்திகள் எதுவும் கசியவில்லை. அதன்பின் உடல்நலம் பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் தனக்கு செய்யப்பட்டு இருந்த மூட்டுவலி அறுவை சிகிச்சை குறித்து பரிசோதனை செய்வதற்காக, நேற்று மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார் கார்த்திக்.
இதனிடையே, மருத்துவமனையில் கார்த்திக் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கார்த்திக் தரப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது, இதனை மறுத்துள்ளதோடு, அவர் நலமாக இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.