குருவாயூரில் எளிமையாக நடந்த காதல் பட நாயகி சந்தியாவின் திருமணம் !

2004-ல் வெளியாகி வெற்றி பெற்ற ‘காதல்’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுக மானவர் நடிகை சந்தியா. தொடர்ந்து நடிகர் ஜீவாவுடன் ‘டிஸ்யூம்’ படத்தில் நாயகியாக நடித்தார். 
குருவாயூரில் எளிமையாக நடந்த காதல் பட நாயகி சந்தியாவின் திருமணம் !
மேலும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். கேரளாவைச் சேர்ந்த நடிகை சந்தியா சென்னை வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத் தினருடன் வசித்து வருகிறார்.

இவருக்கும், சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஐ.டி. என்ஜினீயர் வெங்கட் சந்திர சேகரன் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். 

இவர்களது திருமணம் நேற்று சென்னையில் நடை பெறுவதாக இருந்தது. இந்தநிலையில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் சந்தியா தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பையும் சூழ்ந்தது. 

இதனால் அவர்கள் வெளியேற வரமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக இருப்பதால் திருமணத்தை 
சென்னைக்கு பதில் கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் நடத்தலாம் என சந்தியாவின் பெற்றோரும், மணமகனின் பெற்றோரும் பேசி முடிவு எடுத்தனர்.

அதனை உறவினர் களுக்கு தெரியப் படுத்த சந்தியா குடும்பத் தினர் முயற்சி செய்தனர். ஆனால் மழையால் தகவல் தொடர்பு துண்டிக்க ப்பட்டதால் யாருக்கும் தகவல் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தநிலை யில் கடந்த வெள்ளிக் கிழமை மழை ஓய்ந்து நிலைமை சீரடைந்ததும் சந்தியா குடும்பத் தினரும், மணமகன் வெங்கட் சந்திர சேகரன் குடும்பத் தினரும் காரில் குருவாயூர் புறப்பட்டனர்.
குருவாயூரில் எளிமையாக நடந்த காதல் பட நாயகி சந்தியாவின் திருமணம் !
சென்னையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர்களது கார் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. 

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை தள்ளி வந்து கரை சேர்த்தனர்.

அதன்பிறகு அவர்கள் ஒரு தனியார் பஸ்சை வாடகைக்கு பிடித்து குருவாயூர் சென்றனர். 

நேற்று காலை குருவாயூர் கோவிலில் சந்தியா- வெங்கட்சந்திர சேகரன் திருமணம் எளிய முறையில் நடந்தது. இதில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

திருமணம் குறித்து சந்தியாவின் பெற்றோர் அஜித்குமார் – மாயா ஆகியோர் கூறியதாவது:-
மழையால் சந்தியா திருமணத்தை சென்னையில் நடத்த முடிய வில்லை. இதனால் குருவாயூர் கோவிலில் திருமணம் நடத்தினோம். 

நாங்கள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த முன்பு திட்டமிட்டு இருந்தோம். தற்போது மழை வெள்ளம் காரணமாக எளிய முறையில் திருமணத்தை நடத்தி உள்ளோம்.

திருமண செலவுக்காக திட்டமிட்டு இருந்த தொகையை சென்னை யில் மழை வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மக்களின் நிவாரண உதவிக்கு வழங்க திட்ட மிட்டுள்ளோம். 

மழை குறைந்து இயல்பு நிலைக்கு வந்த பின்பு வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:
Privacy and cookie settings