அழிவின் விளிம்பில் இந்திய சிங்கங்கள் அமெரிக்கா அறிவிப்பு !

இந்திய சிங்கங்களை அழிவின் விளிம்பு நிலையில் உள்ள உயிரினங்களாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியா, கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள வனப்பகுதிகளில் மட்டும் 
இவ்வகை சிங்கங்கள் அரிதாக காணப்படுவதால் இவற்றை அழிவின் விளிம்பு நிலையில் உள்ள உயிரினங்களாக அமெரிக்க மீன்வளம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

'பாந்தெரா லியோ லியோ' என அழைக்கப்படும் இவ்வகை இந்திய சிங்கங்கள் உலகம் முழுவதும் சுமார் 1400 மட்டுமே வாழ்ந்து வருகின்றன. 

இவற்றில் 14 ஆப்பிரிக்க நாடுகளில் 900 சிங்கங்களும், இந்தியாவில் மீதி 523 சிங்கங்களும் வாழ்வதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க மீன்வளம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத்துறையின் செய்திக்குறிப்பு,

இந்த அரியவகை சிங்கங்களை பாதுகாக்க இவற்றை அழிவின் விளிம்பு நிலையில் உள்ள உயிரினங்களாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings