நினைவு இழப்பைத் தடுக்கும் தூக்க ஹோர்மோன் !

தூக்கம் என்பது உடலையும் மனதையும் ரீசார்ஜ் செய்யும் முக்கிய செயல்பாடு. ஆரோக்கியமான தூக்கம் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது 
நினைவு இழப்பைத் தடுக்கும் தூக்க ஹோர்மோன் !
மற்றும் நோய்களையும் தடுக்கிறது. போதுமான தூக்கம் வராத போது மூளை சரியாக செயல்படாது. இதனால் கவனம் செலுத்துவதற்கும், தெளிவாக சிந்தித்து, நினைவுகளை செயலாக்குவதற்கும் ஆன திறன்களை குறைக்கும்.

நினைவு இழப்பைத் தடுக்க தூக்க ஹோர்மோன்கள் உதவுகிறது என புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வை கிளாக்சோவை மையமாகக் கொண்ட சி.பி.எஸ் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வு குழு அல்சீமர் நோய் திட்டம் குறித்த 6 மாத ஆய்வை மேற்கொள்கிறது. இதற்கு அல்சீமர் எனப்படும் நினைவுத்திறன் பாதிப்பு உள்ள 50 நோயாளிகளை தேர்வு செய்தது.

இவர்களுக்கு மெலட்டோனின் ஹோர்மோன் கொண்ட மருந்து அளிக்கப்பட்டு அவர்களது நினைவு இழப்பு தடுப்பு ஆய்வு செய்யப் படுகிறது.

உலக அளவில் இந்த தூக்க ஹோர்மோன் கொண்டு நடத்தப்படும் முதல் ஆராய்ச்சி இது என நம்பப் படுகிறது. இந்த ஆய்வை மேற்கொள்ளும் சி.பி.எஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் கார்டன் கிராபோர்டு கூறியதாவது:
நினைவு இழப்பைத் தடுக்கும் தூக்க ஹோர்மோன் !
நினைவு இழப்பு நோயாளி களுக்கும் மட்டுமல்லாது இவர்களது குடும்பத்தினர், நண்பர்களு க்கும் பாதிப்பை ஏற்படுத்து கிறது. 

ஆய்வின் துவக்கக் கட்டப் பணியில் இயற்கை கூட்டுப் பொருளான மெலட்டோனின் முலம் நோயாளிகள் பகல் நேரத்தில் சிறந்த வழியில் செயல்பட முடிகிறது.

இரவு நேரத்தில் நல்ல தூக்கம் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது என்றார். நினைவு இழப்புக்கு மெலட்டோனின் சிகிச்சை தற்போது இல்லை. 

ஆனால் ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் தூக்கப் பிரச்சனையில் அவதிப்படும் முதியோர்களுக்கு பயன்படுத்த பதிவு செய்யப் பட்டுள்ளது. மெலட்டோனின் மருந்து பாதுகாப்பானது. பக்க விளைவுகள் இல்லாதது என உறுதி செய்யப் பட்டுள்ளது.

நினைவு இழப்பை குறைக்கும் ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் மருந்து சிர்காடின் என அழைக்கப் படுகிறது. இந்த ஆய்வுக்கு ஸ்காட்லாந்து ஆர்வலர்கள் உதவி செய்கிறார்கள்.

தூக்கமின்மை பக்கவிளைவுகள்
நினைவு இழப்பைத் தடுக்கும் தூக்க ஹோர்மோன் !
தூக்கம் இல்லாத நிலையில் அவர்கள் நாள் முழுக்க மோசமான நினைவகத்தை கொண்டிருப்பார்கள். பணிகளில் போதுமான கவனம் செலுத்த முடியாது. அடிக்கடி மனநிலை மாற்றங்களுடன் எளிதில் எரிச்சலை அனுபவிக்கலாம். 

அறிவாற்றல் செயல்பாடு குறைவதோடு பகல் தூக்கத்தை உண்டாக்கலாம். நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் என்று 

ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளதாக ஸ்லீப் என்னும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. உடலில் இருக்க வேண்டிய நீர்ச்சத்துக்களை வேஸோபிரஸ்ஸின் என்னும் ஹார்மோன் நிர்வகிக்கிறது. 

தூக்கம் குறையும் போது இந்த ஹார்மோன் சீராக செயல்படாமல் பாதிப்படைகிறது அதனால் உடலுக்கு போதுமான நீர்ச்சத்து கிடைக்காமல் போகிறது.

தூக்கத்தை மேம்படுத்தும் குறிப்புகள்
நினைவு இழப்பைத் தடுக்கும் தூக்க ஹோர்மோன் !
சிறந்த தூக்கத்துக்கான குறிப்புகளில் தரம் முக்கியமானது. இரவு முழுவதும் நன்றாக தூங்க இந்த குறிப்புகள் உதவும். வழக்கமான தூக்க நேரத்தை பின்பற்றவும். ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்வது அவசியம்.

ஒழுங்கற்ற தூக்க அட்டவணை மோசமான தூக்கத்தின் தரம் மற்றும் கால அளவுடன் இணைக்கப் பட்டுள்ளது. அமைதியான படுக்கை நேர வழக்கத்தை உருவாக்குவது தூங்குவதற்கான மனநிலையை பெற உதவும். தூக்கத்தை மேம்படுத்த இசையை கேட்கலாம்.
Tags:
Privacy and cookie settings