விதவை சமையலுக்கு எதிர்ப்பு... களம் இறங்கிய ஆட்சியர் !

பிகாரில் விதவைப் பெண் சமையலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், மாவட்ட ஆட்சியரே நேரடியாக பள்ளிக்கு சென்று அவர் சமைத்த உணவை கிராம மக்கள் முன்னிலையில் சாப்பிட்டு, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
விதவை சமையலுக்கு எதிர்ப்பு... களம் இறங்கிய ஆட்சியர் !
இங்குள்ள கோபால் கஞ்ச் மாவட்டத்தில் கிராமப் பள்ளி ஒன்றில், சுனிதா கன்வார் என்ற பெண் சமையல் பணியா ளராக இருந்தார். கணவரை இழந்த சுனிதாவு க்கு இந்த பணி ஒன்று தான் ஒரே வாழ்வதா ரமாக இருந்தது. 

இந்நிலையில் மூட நம்பிக்கையில் திளைத்த கிராமத் தினர் சிலர், விதவையான அவர் சமையல் செய்து குழந்தை களுக்கு பரிமாறக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த ஒரு மாத காலமாக அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் சுனிதாவு க்கு இது தொடர்பாக தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்துள்ளனர். 

இதனை சமாளிக்க முடியாத சுனிதா, ஒரு கட்டத்தில் கோபால் கஞ்ச் மாவட்ட ஆட்சியர் ராகுல் குமாரை அணுகினார்.
இதை யடுத்து அந்த கிராமத்து பள்ளிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர், சுனிதா தயாரித்த உணவை கொண்டு வர சொன்ன தோடு, அதனை கிராம மக்கள் அனைவர் முன்னி லையிலும் குழந்தை களுடன் சேர்ந்து சாப்பிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையை கண்ட கிராம மக்கள் போராட்ட த்தை கைவிட்டு விட்டார்கள். மாவட்ட ஆட்சியருக்கு இப்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Tags:
Privacy and cookie settings