5 ஆவதும் பெண் பிள்ளையா? அதிர வைத்த புகைப்படம் !

அமெரிக்காவின் ஆண்ட்ரூ மற்றும் லோரா தம்பதியர் தமது பேஸ்புக் பக்கத்தில், இளவரசி போல உடையணிந்து கொண்டுள்ள நான்கு பெண் குழந்தைகளிடையே 
5 ஆவதும் பெண் பிள்ளையா? அதிர வைத்த புகைப்படம் !
அவர்களது மூத்த சகோதரனான மேத்தியூ(6) அதிர்ச்சியாக இருக்கும் படத்தை வெளியிட்டிருந்தனர். 

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தைச் சேர்ந்த மேத்தியூ லாஸ்ட்டுக்கு ஏற்கனவே நான்கு சகோதரிகள். நாட்டலி(4), ஆனிமேரி(2), கேத்தரீன்(2), எலிசபெத்(2) என 

நான்கு சகோதரிகளிடையே கி்ண்டல், கேலிக்கு உள்ளாகிய மேத்தியூ இவர்களை சமாளிக்க முடியாமல், சிக்கித் தவித்து வருகின்றான். 

தற்போது மேத்தியூவின் பெற்றோர் மீண்டும் தமக்கு அடுத்த பெண் குழந்தைப் பிறக்கப் போகும் செய்தியை குழந்தைகளிடம் தெரிவித்தனர். 

பெண் குழந்தைகள் அனைவரும் இந்த செய்தியைக் கேட்டதும் உற்சாகமடைந்தனர். ஆனால், அவர்களது அண்ணனான மேத்தியூ இந்த செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தான். 
இந்த சம்பவத்தை புகைப்படமெடுத்து தமது பேஸ்புக் பக்கத்தில் ஆண்ட்ரூ மற்றும் லோரா தம்பதியர் வெளியிட்டிருந்தனர். 

ஐந்தாவதும் சகோதரியா? என்ற கேள்வியுடன் அதிர்ச்சியடையும் மேத்தியூவின் புகைப்படம் பேஸ்புக்கைக் கலக்கி வருகின்றது.

சகோதரிகளுடன் வளர்வதால் கிடைக்கும் பெண்களைப் பற்றிய புரிதல் மேத்தியூவுக்கு வளர்ச்சியடைந்த பின்னர் தெரியவரும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
Tags:
Privacy and cookie settings