அம்பானிக்கும் கடன்சுமை 150 அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்பனை !

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தங்களது கடன் சுமையைக் குறைப்பதற்காக, நவி மும்பையில் இருக்கும் 150 அடுக்குமாடிக் குடியிருப்புகளை விற்பனை செய்துள்ளது. 
இதன் மதிப்பு 330 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. அதிகமாக உள்ள நிலபேரத் துறை சொத்துக்களை, விற்பனை செய்து பணமாக்கும் திட்டத்தின் தொடக்கமாக, ரிலையன்ஸ் இந்த விற்பனையை துவங்கி உள்ளது. 

கடந்த சில வருடங்களாக, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இருக்கும் கடன்களை திரும்பச் செலுத்துவதே, இந்த விற்பனையின் நோக்கம் என்று கூறப்படுகிறது. 

இந்த திட்டத்தின் மூலம் அடுத்த சில வருடங்களில், தங்களது கடனை 39,894 கோடி ரூபாயிலிருந்து, 10,000 கோடிக்கு குறைக்க முடியும் என ரிலையன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

150 அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை நடவடிக்கைகளில், 50 சதவீதத்துக்கு மேல் முடிந்துவிட்டதாகவும், மீதி தொகைகள் நடப்பு நிதி ஆண்டுக்குள் முடிந்து விடும் என்றும் தெரியவந்துள்ளது. 

அதிகமாக உள்ள சொத்துக்களை விற்பனை செய்யும் திட்டத்தின் படி, அடுத்ததாக புது டெல்லியின் முக்கிய பகுதியான கன்னோட் பிளேசில் உள்ள 4 ஏக்கர்கள் சொத்தினை விற்பனை செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
Tags:
Privacy and cookie settings