ஜனாஸாவின் சட்டங்கள் என்ன? தெரியுமா?

மனிதன் உலகில் பிறந்தவுடன் அவனுக்கு மரணம் நிச்சயம் என்பது இறைவனால் வகுக்கப்பட்ட நியதி. 
ஜனாஸாவின் சட்டங்கள் என்ன? தெரியுமா?
ஒருவர் மரணித்து விட்டால் அந்த மைய்யத்திற்கு செய்யப்பட வேண்டிய கடமைகளான குளிப்பாட்டுதல், கபனிடல், 

தொழ வைத்தல், கப்றில் வைக்கப்படல் போன்ற கடமைகள் சாமானியர்கள் புரிந்து செய்ய முற்படுவதில்லை.

மைய்யத்தின் நெருங்கிய உறவினர்கள் செய்ய வேண்டிய காரியங்களைக் கூட செய்யாமல் அல்லது செய்யத் தெரியாமல் 
எல்லா வற்றுக்கும் பள்ளியில் தொழ வைக்கும் ஹஜரத்களையும், முஅத்தீன்களையும் அழைத்துச் செய்யச் சொல்லும் வழக்கம் தான். இன்று எல்லா ஊர்களிலும் நம்மிடையே இருந்து வருகிறது. 

அவ்வாறில்லாமல் நம்முடைய உறவினர்கள் மரணித்தால் அவர்களின் எல்லா காரியங்களையும் நாமே முன்னின்று செய்வது சுன்னத்தாக இருக்கிறது.

எல்லோரும் ஜனாஸாவின் சட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்களின் (சுன்னத்தின்) அறிவித்துத் தந்த ஆதாரங்களின் படி இங்கு தந்துள்ளோம்.

எல்லோரும் அறிந்து அதன் படி நடந்து இறைவனின் நற் பேற்றினைப் பெறுவோமாக. இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் இறப்பது நிச்சயம். 
இதில் எந்தவொரு மனிதனும் ஐயப்படவோ கருத்து முறன்பாடு கொள்ளவோ முடியாது. இதையே அல் குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

'நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் வந்தடைந்தே தீரும் மிகவும் உறுதியாக கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே" (4:78)
ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு அவர்களது கட்டளை களுக்கு அடிபணிந்து வாழ்வது எவ்வாறு கடமையோ

அவ்வாறே அவன் மரணித்த பின் அவனது கண்களை கசக்கி மூடி விடுவதிலிருந்து புதை குழியில் வைத்து விட்டு திரும்புகின்ற வரைக்கும் 

உண்டான ஜனாஸாவோடு தொடர்புடைய அனைத்து அம்சங்களிலும் அல்லாஹ் வினதும், அவனது தூதரினதும் கட்டளைகளுக்கேற்ப ஒழுகுவது 
ஏனைய முஸ்லிம்கள் அனைவர் மீதுமுள்ள கடமையாகும் (ஃபர்லு கிஃபாயா) அதனை சிலர் மேற்கொண்டாலும் அனைவர் மீதுமுள்ள கடமை நீங்கி விடும்.
அதனை எவரும் நிறைவேற்ற வில்லை எனில் அல்லாஹ் இடத்தில் அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவர். 

ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளைப்  GO TO THERE FOR  JANAZA  மேற்கொள்ள வேண்டும்.
Tags: