ஜிகோகுடானி வெந்நீர்க் குளம் !

இயற்கையின் அழகுகளில் ஒன்று பெருக் கெடுக்கும் நீரூற்று. அதிலும் பனிப் பாறைகளுக்கு மத்தியில் உருவாகும் வெந்நீர் ஊற்று அதிசயமான அழகு கொண்டது.
ஜிகோகுடானி வெந்நீர்க் குளம் !
ஜப்பான் நாட்டில் உள்ள ஜோஷினெட்சு கோகன் தேசியப் பூங்காவில் இயற்கையின் விந்தையாக அமைந்துள்ளது ஜிகோகுடானி வெந்நீர்க் குளம்.

யாகோபு நதி பாய்ந்தோடும் பள்ளத்தாக்கில் ஜோஷினெட்சு கோகன் தேசியப் பூங்கா அமைந் துள்ளது. இப்பூங்கா அமைந்துள்ள காடுகள் குளிர் காலத்தில் உறைந்து பனிக் கட்டிகளாகக் காட்சி யளிக்கும்.

மனிதனின் இயல்பை யொத்த இந்தக் குட்டைவால் குரங்குகள் பனியிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அருகில் உள்ள ஜிகோகுடானி என்ற இடத்திற்கு ஓடுகின் றனவாம்.

அங்கு தான் அமைந் துள்ளது இயற்கையின் அந்த அதிசயக் குளம். ஜோஷினெட்சு கோகன் தேசியப் பூங்காவி லிருந்து 850 மீட்டர் உயரத்தில் அமைந் துள்ளது

ஜிகோகுடானி. இங்கு பாறைகளுக்கு மேலே பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன. ஆனால் பாறை களுக்கு நடுவே வெந்நீர் நிரம்பிய குட்டை காணப் படுகிறது.
பூமிக்கு அடியில் இருக்கும் வெப்பம் காரணமாக பறைப் பிளவுகளில் இருந்து வரும் நீர் வெந்நீராக வெளி யேறுகிறது.

இந்நீர் அங்கேயே தங்கி விடுவதால் அதன் சூடு தணியாமல் அப்படியே ஆவியாகி வெளியேறுகிறது என்கின்றனர் ஆராய்ச் சியாளர்கள்.
Tags:
Privacy and cookie settings