சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை மழை விடுமுறை !

மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ங்களில் உள்ள பள்ளி, கல்லூரி களுக்கு நாளையும் (புதன்கிழமை) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. 
 சென்னை - தாம்பரத்தை அடுத்த கன்னடபாளையம் குடியிருப்புகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அங்குள்ள அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். | படம்: க.ஸ்ரீபரத்
சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி களுக்கு நாளை (புதன்கிழமை) விடுமுறை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித் துள்ளார். 

இதேபோல், மழை காரணமாக புதன்கிழமை பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை என்று திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சிய ர்களும் அறிவித் துள்ளனர். 

முன்னதாக, மாலத்தீவில் ஏற்கெனவே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மறைந்து விட்ட நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே பு

திய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி யுள்ளதால் தமிழகத்தில் மழை வாய்ப்பு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. 

தற்போது பெரும் பாலான மக்கள் பள்ளிகளில் தான் தங்க வைக்கப் பட்டுள்ளனர். பள்ளிக்கூடங்கள் உடனடியாக திறக்கப் படும் பட்சத்தில், அந்த மக்களுக்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்ய வேண்டியதும் கட்டாயத் தேவை யாகிறது. 

பள்ளிகளில் வேலை நாட்களை நீட்டிக்க முடிவு? 
 
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல மாவட்ட ங்களில் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு வருவதால் ஆண்டு இறுதியில் வேலை நாட்களை நீட்டிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்து ள்ளது. 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் ஆண்டு தோறும் கண்டிப்பாக குறிப்பிட்ட நாட்கள் இயங்க வேண்டும். அதன்படி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 220 நாட்களும், அதேபோல், உயர்நிலை, 

மேல்நிலைப் பள்ளிகளுக்கு 200 நாட்களும் வேலை நாட்கள் ஆகும். வேலைநாள் கணக் கீட்டுக்கு அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் கல்வி ஆண்டையும் (ஜூன்-மே) தனியார் பள்ளிகள் காலண்டர் ஆண்டையும் (ஜனவரி-டிசம்பர்) கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. 

தற்போது கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்ட ங்களுக்கு இதுவரை 17 நாட்கள் (சனி, ஞாயிறு நீங்கலாக) விடுமுறை விடப் பட்டுள்ளன. 

இதுபோன்ற எதிர்பாராத விடுமுறை நாட்களை சரிசெய்ய சனிக்கிழமை களில் வகுப்பு வைத்துக் கொள்வது வழக்கம். பருவ மழைக் காலம் டிசம்பர் வரை இருப்பதால் இன்னும் விடுமுறை விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

எனவே, மழைக்காக விடப்பட்ட விடுமுறை நாட்களை சரிசெய்வ தற்காக அரையாண்டுத் தேர்வு விடுமுறையை ரத்து செய்யலாமா? என பள்ளிக் கல்வித் துறை திட்ட மிட்டு வருகிறது. 

ஒருவேளை இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் பட்சத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் அனைத்து சனிக்கி ழமைகளும் வேலை நாட்களாக அறிவிக் கப்பட்டு வகுப்புகள் நடைபெறும்.

அரையாண்டுத் தேர்வு விடுமுறை டிசம்பர் இறுதி வாரத்தில் ஏறத்தாழ 10 நாட்களுக்கு விடப்படும் என்பது குறிப்பிடத் தக்கது. 

பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி வகுப்பு களுக்கு அரையாண்டு தேர்வுக் கால அட்டவணை ஏற்கெனவே அறிவி க்கப்பட்டு விட்டது.

மழைக்காக தொடர்ந்து 2 வாரங் களுக்கு மேல் விடுமுறை விடப்பட்டி ருப்பதால் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடத்து வதிலும் சிக்கல் ஏற்பட் டுள்ளது. 

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் விசாரித்த போது, "கனமழை க்காக விடப்பட்ட விடுமுறை நாட்களை சரிகட்ட அரையாண்டுத் தேர்வு விடுமுறை ரத்து செய்வது குறித்து

இது வரை எந்த முடிவும் எடுக்கப்ப டவில்லை. நிர்ணயிக்கப் பட்ட வேலை நாட்கள் குறையும்பட்சத்தில் ஆண்டு இறுதியில் வேலை நாட்களை நீட்டித்து க்கொள்ளலாம்" என்றனர். 

தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளிக ளுக்கும் அதிகாரப் பூர்வமாக அரசு விடுமுறை விடப் பட்டாலும் கூட சில தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை தினமும் பணிக்கு வரச்சொல்லி கட்டாயப் படுத்துவதா கவும் புகார் எழுந்து ள்ளது.
Tags:
Privacy and cookie settings