உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது மருத்துவர்கள் வேகமுடன் குழந்தையை இழுத்ததில் அதன் தலை பிரிந்து தனியே வந்துள்ள சம்பவத்தில் பெண் மருத்துவர் மற்றும் நர்சு ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வழக்கு பதிவு
கடந்த ஞாயிற்று கிழமை நடந்த இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய தையபா இக்பால் என்ற மருத்துவரும் மற்றும் மாதுரி என்ற நர்சும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது 304 (கொலை இல்லாத உள்நோக்குடன் ஏற்படுத்திய காயத்தில் மரணம் அடைதல்) மற்றும் 315 (குழந்தை உயிருடன் பிறப்பதற்கு முன் தடுத்தல் அல்லது பிறந்த பின் இறப்பதற்கு காரணம் ஆக இருத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரசவ வலி
உத்தரபிரதேசத்தில் ராம்பூர் மாவட்டத்தில் 32 வயது நிறைந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அன்று மாலை பிரசவம் நடந்துள்ளது.
எம்.எல்.ஏ. வருத்தம்
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து விசயம் வெளியே தெரிய வந்துள்ளது.
அதனுடன் மாநில மந்திரி மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ.வான முகமது ஆசம் கான் வருத்தம் தெரிவித்துள்ளதுடன் முறையான நடவடிக்கை எடுக்க உள்ளூர் நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளார் என அவரது செய்தி தொடர்பாளர் பசத் கான் ஷானூ கூறியுள்ளார்.
அதேவேளையில், உத்தரகாண்ட் பெண்கள் நல அமைப்பின் குழு ஒன்று சம்பவம் நடந்த மாவட்ட மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டதுடன், கர்ப்பிணி பெண்ணுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறியுள்ளனர்.
குப்பை தொட்டியில் உடல்
உள்ளூர் தலைவர் ஒருவரும், தலை இல்லாத உடல் ஒன்று குப்பை தொட்டியில் போடப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என ராம்பூர் நகர தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி சங்கர் லால் சரஸ்வத் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தெரிய வந்ததை அடுத்து அப்பகுதியில் பதற்றம் எழுந்தது. ராம்பூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் நேற்று மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். இந்த சம்பவம் குறித்த தகவல்கள் கிடைத்த பின்பே எனது கருத்தை தெரிவிப்பேன் என அவர் கூறியுள்ளார்.