தமிழிலும், ஆந்திராவிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆறடி பொம்மாயி நடிகை. இவர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக்கொள்வார் என்றும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் இதை மறுத்தார் பொம்மாயி நடிகை. இந்த நிலையில் தான் ஒரு ரகசிய தகவல் ஆந்திரா தேசத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தற்போது சரித்திர படங்களில் ருத்ரதாண்டவம் ஆடும் பொம்மாயி நடிகையும், பலி படத்தில் மகிழ்மதி தேசத்து இளவரசனாக நடித்த நடிகரும் தீவிரமாக காதலித்து வருகிறார்களாம். அக்கட தேசத்தில் இதுதான் ஹாட் டாபிக்.
பலி படத்தில் நடிக்கும் போதே இருவருக்கும் காதல் பூத்து குலுங்குச்சாம். இரண்டு பேர் வீட்டு தரப்புலேயும் கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாகவும், இரண்டாம் பாகத்தை முடிச்சு கொடுத்துட்டு கெட்டிமேளம் கொட்டிடலாமுன்னு முடிவு பண்ணியிருக்காங்களாம்.