நீர் உறிஞ்சும் சாலை !

இங்கிலாந்தைச் சேர்ந்த டார்மாக் கட்டுமான நிறுவனம் புதிய வகையிலான டாப்மிக்ஸ் பெர்மிபல் என்கிற கான்கிரீட் கலவையை உருவாக்கியுள்ளது.  


தண்ணீரை உறிஞ்சும் வகையிலான இந்த கான்கிரீட் கலவையைக் கொண்டு சாலை அமைத்தால் சாலையில் தண்ணீர் தேங்கும் சிக்கல் இருக்காது. இந்த கான்கிரீட் தண்ணீரை உறிஞ்சி நிலத்தினுள் அனுப்பி விடுகிறது. 

மூன்று அடுக்கில் அமைக்கப்படும் இந்த வகை கான்கிரீட் சாலையால் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்கலாம். இதை அமைக்க குறைந்த செலவே ஆகும் என்று கூறியுள்ளது அந்த நிறுவனம். 

அனைத்து இடங்களிலும் சாத்தியமில்லை என்றாலும் நடைபாதை, பார்க்கிங் பகுதிகள் மற்றும் தெருக்களில் இந்த கலவையைக் கொண்டு சாலை அமைக்கலாம் என்றும் யோசனை கூறியுள்ளது
Tags:
Privacy and cookie settings