‘டி.என்.ஏ. ரத்தப் பரிசோதனை’ (DNA blood test) என்றொரு புதிய பரிசோதனை வந்திருக்கிறது.


இதை ‘திரவத் திசு ஆய்வு’ (Liquid biopsy) என்றும் அழைக் கிறார்கள்.

புற்று நோயியலில் புதிய திருப்பு முனையாகக் கருதப்படு கிறது இந்தப் பரிசோதனை.

புற்று நோயியல் துறை ஆய்வில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம் இது என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள்.

அமெரிக்கா உள்ளிட்ட சில வளர்ச்சியடைந்த நாடுகளில் 2000-களின் தொடக்கத்தில் சோதனை

முயற்சியில் இருந்து வந்த இந்தப் பரிசோதனை தொழில் நுட்பம், தற்போது சாத்திய மாகியிருப்ப தாகக் கூறுகிறார்கள் மருத்துவர்கள். 

அதேநேரம், “இது வெற்றிகரமான பரிசோதனை அல்ல; மருத்துவத் துறையை மேலும் வணிக மயமாக்கும்

முயற்சிகளில் ஒன்று தான் இதுவும்” என்று சர்ச்சைகளும் முளைத்துள்ளன. 

திரவத் திசு ஆய்வு என்றால் என்ன? 


இது நாள் வரை ஒருவருக்குப் புற்றுநோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய,

புற்றுநோய்க் கட்டி என்று சந்தேகப்படும் பகுதியில் உள்ள திசுவை எடுத்து ஆய்வு (Tissue biopsy) செய்வார்கள்.

வலியை ஏற்படுத்தும் பரிசோதனை இது. தவிர, பல்வேறு கட்டங்களையும் கொண்டது.

ஆனால், திரவத் திசு ஆய்வில் திசுவை எடுக்கும் வலி இருக்காது. வெறும் 10 - 15 மி.லி.

ரத்தப் பரிசோதனை யிலேயே புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம். 

எனவே, ஒருவருக்குப் புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற் கான நடைமுறை,

இதன் மூலம் எளிதாகி யிருக்கிறது, அதற்கான வலியையும் அனுபவிக்க வேண்டியதில்லை. 

சாதகம் என்ன? 

புற்றுநோயின் அபாயகரமான அம்சமே, பதுங்கியிருந்து தாக்குவது தான். ஒருவருக்குப் புற்றுநோய் வந்தால்,

அது பல ஆண்டுக ளானாலும் வெளியே தெரியாமல் போகலாம். பலருக்கும் நோயின் ஆரம்ப கட்டத்தில் துளியும் வலி தெரியாது.

பாதிக்கப் பட்டவர் ஆரோக்கிய மாகவே இருப்பார். ஆனால், திடீரென்று ஒருநாள் கடும் வலியில் துடிப்பார்.

இப்படி பல ஆண்டுகளு க்கும் மேலாகப் புற்றுநோய் என்றே தெரியாமல் போனவர்களும் ஏராளம்.நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வரும் புற்று நோயாளிகளைக் காப்பாற்றுவது மிகச் சிரமம். அரிதாகச் சிலர் மட்டுமே பிழைக்கலாம்.

ஆனால், திரவத் திசு ஆய்வின் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோயைத் தெரிந்துகொள்ளலாம். 

இதன் மூலம் குடல், கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை, நுரையீரல், இரைப்பை ஆகிய புற்று நோய்களைக் குணப்படுத்த வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். 

வாரிசுகளுக்கும் கண்டறியலாம்! 
 
ரத்த அணுவின் உட்கருவைப் பிரித்தெடுத்துச் செய்யப்படும் மரபணு ஆய்வு மூலம்,

எதிர்காலத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் இருக்கிறதா என அறியலாம்.

அவருடைய சந்ததிகளுக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் இருக்கிறதா என்பதையும் அறிய முடியும் என்கிறார்கள். 

குறிப்பாக, மரபணுரீதியாகப் பரம்பரையாகத் தாக்கும் சாத்தியக்கூறுகள் கொண்ட மார்பகப் புற்றுநோய்,

எலும்புப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்.

எதிர்காலத்தில் புற்றுநோய் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே, புற்றுநோய் வந்த பின் சிகிச்சை பெறுவதைவிட, முன்கூட்டியே தடுக்கும் சாத்தியம் உருவாகலாம்.


உங்கள் ஆயுள் எவ்வளவு? 
 
சில வகை புற்றுநோய்கள் குறிப்பிட்ட என்சைம்களைத் தூண்டும் தன்மை கொண்டவை. திரவத் திசு ஆய்வின் ஓர் அம்சமான ‘Cell free exosomes' சோதனை மூலம்,

ஒருவருடைய உடலில் திடீரென்று அதிகரித் திருக்கும் என்சைம்களின் அளவைக் கொண்டு ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டு பிடிக்கலாம். 

மேற்கண்ட பரிசோதனையைத் தவிர, ‘டெலோமெரஸ்’ என்னும் ஆய்வின் மூலம் ஒருவரின் உடலில் இருக்கும்

ரத்த அணுக்கள், குரோமோசோம்களின் அளவு, அமைப்பு, செயல்பாடு ஆகியவற்றைத் துல்லியமாக ஆய்வு செய்வதன் மூலம், 

ஒருவரது ஆயுட் காலம், அவருக்கு என்னென்ன நோய்கள் வரலாம் ஆகிய விவரங்களையும் அறிய முடியும் என்கிறார்கள்

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் செல் பயாலஜி துறை மருத்துவர்கள். 

சர்ச்சை என்ன? 
 
அதேநேரம் இது தொடர்பான சர்ச்சைகளும் மருத்துவ உலகில் முளைக்கத் தொடங்கி யிருக்கின்றன.

“பொதுவாகவே மனித உடலில் பல்வேறு சிறிய புற்றுநோய் அணுக்கள் இருக்கின்றன. அவை அத்தனையுமே பெரிதாக வளரவோ; 

ஆபத்தை ஏற்படுத்தும் சாத்தியமோ கொண்டவை என்று கூற முடியாது.

உதாரணத்துக்கு ஆண்களின் சிறுநீர்ப் பையில் வரும் புராஸ்டேட் (Prostate) புற்றுநோய் அணுக்கள், எல்லா ஆண்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று கூற முடியாது.

இதுபோன்ற சூழலில் மேற்கண்ட பரிசோதனை மூலம் பெரும் பான்மையான நபர்களுக்குப் புற்றுநோய் இருப்பதாகவே பரிசோதனை முடிவுகள் காட்டும்.தவிர, மரபணு மூலம் புற்றுநோய் பரவுவது இன்னும் துல்லியமாக நிரூபிக்கப்படவில்லை.

தவிர, மேற்கண்ட பரிசோதனைக் கான உபகரணங்கள் விலை உயர்ந்தவை. எனவே, பரிசோதனைக் கான கட்டணமும் மிக அதிகமாகவே இருக்கும். 

புற்றுநோய் விழிப்புணர்வு என்கிற பெயரில் மொத்த மக்களையும் புற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்தி மிகப் பெரிய வணிகத்தை மேற்கொள்ளும்

முயற்சி யாகவும் இது இருக்கக் கூடும் என்கிற சந்தேகமும் இருக்கிறது” என்ற பார்வையும் முன் வைக்கப்படுகிறது.