ஆன்லைன் மூலம் விபச்சாரம் ’கிஸ் ஆப் லவ்’ ஒருங்கிணைப்பாளர், மாடல் அழகி கைது !

கேரளாவில் ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடத்தி வந்த கிஸ் ஆப் லவ் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் ராகுல் பசுபாலன், அவரது மனைவியும், மாடலுமான ரஷ்மி ராயர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் இளம் ஜோடிகளை அதிகாரம் செய்து வந்தவர்களை கண்டித்து பொது இடத்தில் கட்டிப்பிடித்து முத்தமிடும் கிஸ் ஆப் லவ் பிரச்சாரம் செய்து வரும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராகுல் பசுபாலன்,

அவரது மனைவியும், மாடலுமான ரஷ்மி நாயர், காசரகோட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி அக்பர் உள்ளிட்டோர் ஆன்லைன் மூலம் ஆண்களை கவர்ந்து விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் நெடும்பசேரி, கொச்சி, மலப்புரம், திருச்சூர் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இன்று காலை வரை தொடர்ந்து தீவிர சோதனை நடத்தினர்.

சோதனையில் ராகுல், ரஷ்மி, அக்பர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சிறுமி ஆவார். அந்த சிறுமி அண்மையில் தான் பெங்களூரில் இருந்து கொச்சி வந்து அந்த கூட்டத்துடன் சேர்ந்துள்ளார்.

பேஸ்புக்கில் கொச்சு சுந்தரிகள் என்ற பெயரில் பக்கத்தை துவங்கி சிறுமிகளின் புகைப்படங்கள், காமக் கதைகள், ஆபாசமான கருத்துகளை வெளியிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சைபர் குற்றப்பிரிவினர் கேட்டுக் கொண்டதன் பேரில் பேஸ்புக் நிர்வாகம் அந்த பக்கத்தை முடக்கியது. அதன் பிறகு அவர்கள் வேறு ஒரு பக்கத்தை துவங்கிவிட்டனர்.
Tags:
Privacy and cookie settings