அதிர்ச்சியாகிடாதீங்க... 'அம்மாவானார்' சமந்தா !

என்னடாது... இன்னும் கல்யாணச் செய்தியே வரல.. அதுக்குள்ள இப்படி ஒரு செய்தியா-ன்னு குழம்ப வேணாம். முதல் முறையாக விஜய் படத்தில் சமந்தா அம்மாவாக நடிக்கிறார். 
 Samantha plays a mom role for the first time
ஹீரோவுக்கல்ல.. ஒரு குழந்தைக்கு! அட்லீ இயக்கும் விஜய்யின் 59வது படத்தில்தான் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் சமந்தா. சரி, அந்தக் குழந்தை யாரு தெரியுமா? நடிகை மீனா பெற்றெடுத்த நைனிகா. 

இந்தப் படத்தில் நடிகர் பிரபு - ராதிகாவுக்கு முக்கிய வேடம் தந்திருக்கிறார்கள். இயக்குநர் மகேந்திரன் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் கலக்கியிருக்கிறாராம். 

விஜய் 59 படத்தின் தலைப்பு, முதல் பார்வை போஸ்டர்கள் வரும் 29-ம் தேதி வெளியாகவிருக்கின்றன. கலைப்புலி தாணு தயாரிக்கும் படம் இது.
Tags:
Privacy and cookie settings