டிரான்ஸ்- சைபீரியன் ரயில்வே. ரஷியாவின் தூர கிழக்கு பகுதியையும் ஜப்பான் கடலையும் மாஸ்கோவுடன் இணைக்கும் பாதை இது.
ஒன்பதாயிரத்து 289 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பாதை உலகின் மிக நீளமான இரயில் பாதையாக கூறப் படுகிறது.
1891 முதல் 1916 வரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கட்டப் பட்ட இப்பாதை ரஷ்ய அரசாங் கத்தின் உதவியாலும் மூன்றாம் அலெக்சாண்டர் மற்றும் அவரது மகன்களின் மேற்பார்வை யிலும் கட்டப் பட்டது.
மிக நீளமான இப்பாதை சீட்டா, ஓம்ஸ்க் போன்ற நூற்று கணக்கான நகரங்களை தன் பாதையில் கடந்து செல்கிறது.
உலகின் மூன்றாவது மிக நெடிய தொடர்ச்சி யான பாதையாக கருதப்படும் டிரான்ஸ்- சைபீரியன் பாதையில் பல திகிலான திரைப் படங்கள் உருவாக்கப் பட்டன.
ரஷ்யாவின் மிக முக்கிய மான போக்குவரத்து தலமான இப்பாதையில், நாள் ஒன்றுக்கு 30 சதவிகித வெளிநாட்டு ஏற்றுமதி பொருட்களும்,
வருடத்திற்கு இரண்டு லட்சம் கொள்கலனுள்ள வியாபார பொருட்களும் ஐரோப்பாவிற்கு அனுப்பப் படுகின்றன.உள்நாட்டு பயணிகள் அதிகம் பயணிக்கும், வெளிநாட்டு பயணிகளை அதிகம் ஈர்க்கும்
இப்பாதையை ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு பயணிக்க எட்டு நாட்கள் ஆகிறது.
இவ்வழியே பயணிக்கும் பயணிகளை வெகுவாக கவரும் டிரான்ஸ் பாதையை விரிவு படுத்தும் முயற்சி இன்றைக்கும் நடந்து வருகிறது.

