கடந்த வருடம் பாக்ஸ் ஆபிஸை கலக்கிய ‘கத்தி’ திரைப்படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. நடிகர் விஜய்க்கு மற்றொரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அப்படத்தில் பாலிவுட் நடிகர் நெய்ல் நிதின் முகேஷ் வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது அவருக்கு ஹாலிவுட்டின் பிரபல சீரியலான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ டீமிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. இவர் கடைசியாக நடித்த படமான சல்மான்கானின் ‘ப்ரேம் ரத்தன் தன் பாயோ’ படத்தில் ஸ்டண்ட் இயக்குனரான க்ரேக் போவெல் மூலமாகவே இந்த வாய்ப்பு கிடைத்ததாக முகேஷ் தெரிவித்துள்ளார்.
க்ரேக் ஏற்கனவே ஹாலிவுட் படங்களான அவெஞ்சர் 2, ஃபாஸ்ட் 6, ஹாரி பாட்டர் போன்ற படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும், ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரிலும் பணியாற்றி வருகிறார்.
நிதின் முகேஷின் திறமையை பார்த்து வியந்த க்ரேக் அவரை ஹாலிவுட்டிற்கு அழைத்துள்ளார். இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இந்த ஹாலிவுட் தொடருக்கு உலகம் முழுவதும் ஏற்கனவே ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
