கூன் விழுதலை தடுக்க முடியும் !

முதுகு கூன் விழுதல் மற்றும் முதுமைத் தோற்றம் : நாம் நேராக சுவற்றின் மீது பிற் புறமாக சாய்ந்து நிற்கும் போது தலை, தோள் பட்டை, இடுப்பு இம்மூன்று பகுதிகளும் சுவரில் உரசினால் முதுகு கூன் இல்லை.
கூன் விழுதலை தடுக்க முடியும் !
கூன் விழுவதை கீழ்கண்ட பயிற்சிகள் மூலம் தவிர்க்க முடியும்.  படிக்கும் போது, கம்யூட்டரை பயன் படுத்தும் போது கழுத்தை அதிகம் வளைக்காமல் செய்தல்

உட்காரும் போது முதுகுத் தண்டும், தலையும் நேராக இருக்குமாறு அமர்தல். யோகா பயிற்சியின் போது (பத்மாசனம், வஜ்ராசனம் 
போன்ற பயிற்சிகளின் மூலம்) முதுகை நேராக வைத்தல். முதுகை நேராக வைக்கும் உடற் பயிற்சிகளை தினமும் செய்தல்.

இடுப்பு வலியைக் குறைக்க வயிற்று தசைகளையும் இடுப்பு தசைகளையும் உறுதிப்படுத்தும் பயிற்சிகளைச் செய்தால் நல்லது.
மல்லாக்க படுத்துக் கொண்டு முழங்காலை மடக்காமல் கால்களை உயர்த்துதல் குப்புற படுத்துக் கொண்டு முழங்காலை மடக்காமல் கால்களை பின்புறமாக தூக்குதல். 

இரண்டு பயிற்சி களையும் வயிறு காலியாக இருக்கும் போது சுமார் 25 தடவை தினமும் செய்தால் நல்லது
Tags: