விஜய்க்கு அடுத்தது ’வெற்றி’ தான்..!

‘புலி’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இதில் சமந்தா காட்சிகள் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது எமி ஜாக்சனுடன் நடித்து வருகிறார் விஜய்.
விஜய்க்கு அடுத்தது ’வெற்றி’ தான்..!!
இதன் படப்பிடிப்பு நேற்று பெரம்பூரில் உள்ள பின்னி மில்லில் இடப்பட்டுள்ள மார்கெட் செட்டில் நடைபெற்றது.

இப்படத்தில் விஜய் இதுவரை நடித்திராத ஒரு புதிய கெட்டபில் தோன்றவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே எந்த விதத்திலும் போட்டோஸ் மற்றும் வீடியோ வெளியாகி விடக்கூடாது என்பதில் படக்குழு மிகவும் தீவிரமாக இருக்கிறார்களாம்.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளி தினத்தன்று வெளியிடவிருக்கின்றனர். 

‘காக்கி’ மற்றும் ‘வெற்றி’ என்ற இரு தலைப்புகள் பரிசீலனையில் இருந்தாலும் ‘வெற்றி’ என்ற தலைப்புக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதால் அதுவே உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே அந்த பெயருடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் ரெடியாகிவிட்டதாம்.

இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை மிகப்பெரிய தொகைக்கு ஐங்கரன் நிறுவனம் வாங்கக் கூடும் எனவும் செய்திகள் கசிந்துள்ளன.
Tags:
Privacy and cookie settings