மதுவிலக்கை அமல்படுத்தும் வரையில் வெடிகுண்டுகள் வீசினாலும் தடியடி நடத்தினாலும் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும் என்று அக்கட்சி யின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் வருகி றது. இதில் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு செலவு செய்யப்ப டுகிறது என்பதை அ.தி.மு.க. அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்பு அல்லது மக்கள் தீர்ப்பு வரத்தான் போகிறது. ஜெயலலிதா வின் ஆட்சி போதும் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
அப்துல்கலாம் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு ஜெய லலிதா உடல்நிலை இருக்கிறது.. ஆனால் மோடிக்கு மட்டும் விருந்து வைக்க முடிகிறதா? இவ்வாறு குஷ்பு பேசினார்.
அண்மையில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்று நடிகை குஷ்பு கருத் து தெரிவித்து சர்ச்சை ஏற்பட்ட நிலையில் தற்போது இந்த கருத்தை குஷ்பு கூறியுள்ளார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் தமிழகத் தலை வர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத் தில் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, மூத்த தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் நடிகை குஷ்பு பேசியதாவது:
மது விலக்கை அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் மட்டும் அல்ல அனைத்து கட்சி களும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆனால் ஒரே ஒரு கட்சி மட்டும் அதை பற்றி கவலைப்படவில்லை. மதுக்கடைகளால் மக்கள் சீரழி கின்றனர். இதற்கான தார்மீக பொறுப்பை அ.தி.மு.க. அரசு ஏற்க வேண்டும்.
மது விலக்கை அ.தி.மு.க. வலியுறுத்தாதற்கு காரணம் என்ன என்பது மக்களு க்கு தெரியும். பிராந்தி, விஸ்கி போன்ற மதுவகைகள் எங்கிருந்து யாரால் தயாரிக்கப்படுகிறது. அதன் மூலம் வருமானம் யாருக்கு செல்கிறது என்பதும் மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் வருகி றது. இதில் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு செலவு செய்யப்ப டுகிறது என்பதை அ.தி.மு.க. அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
வெளிப்படையாக ரூ.30 ஆயிரம் கோடி செலவு பற்றி கூற முடியுமா? டாஸ் மாக் பணம் எங்கே செல்கிறது என்பதற்கு பதில் கிடைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் எப்போது ஆட்சிக்கு வரும் என்று பலர் ஏங்குகிறார் கள். பாரதிய ஜனதாவும், அ.தி.மு.க. வும் ஒன்று சேர்ந்து மக்களை ஏமாற்று கிறார்கள்.
மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றே கால் ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்து உள்ளது. இதேபோல் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியிலும் உருப்படியாக எந்த திட்டமும் இல்லை. பொதுத்தேர்தலுக்கு இன்னும் 8 மாதம்தான் இருக்கிறது.
நீதிமன்றத் தீர்ப்பு அல்லது மக்கள் தீர்ப்பு வரத்தான் போகிறது. ஜெயலலிதா வின் ஆட்சி போதும் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
அதை காங்கிரசால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்கிறார்கள். தமிழ்நாட்டி ல் வாழுகிற ஒவ்வொரு குடிமகனும் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து விடுதலை வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.
தமிழக மக்கள் காங்கிரசின் வளர்ச்சியை கண்டு திரும்பி பார்க்கிறார்கள். மற்ற கட்சிகளும் கடந்த 10 மாதத்தில் காங்கிரசின் வளர்ச்சியை கண்டு பயப்படு கின்றனர்.
தமிழக மக்கள் காங்கிரசின் வளர்ச்சியை கண்டு திரும்பி பார்க்கிறார்கள். மற்ற கட்சிகளும் கடந்த 10 மாதத்தில் காங்கிரசின் வளர்ச்சியை கண்டு பயப்படு கின்றனர்.
2016 தேர்தலில் காங்கிரசின் வெற்றி மிகப்பெரிய அளவில் இருக்கும். மது வில க்கை அமுல்படுத்தும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. குண்டு வீசினாலும், தடியடி நடத்தினாலும் அதை கண்டு பயந்து பின்வாங்க மாட்டோம்.
அப்துல்கலாம் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு ஜெய லலிதா உடல்நிலை இருக்கிறது.. ஆனால் மோடிக்கு மட்டும் விருந்து வைக்க முடிகிறதா? இவ்வாறு குஷ்பு பேசினார்.
அண்மையில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமே இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தவர் குஷ்பு என்பது குறிப்பிடத்தக்கது. என்னம்மா சொல்றீங்க?...