பட்டியலிடப்பட்ட தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநராக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் நிறுவனர் பவன் முஞ்சால் இருக்கிறார்.
கடந்த நிதி ஆண்டில் ரூ.44 கோடியை சம்பளமாக பெற்றிருக்கிறார். நிறுவனத்தின் நிகர லாபத்தில் இவரது சம்பளம் மட்டும் 1.84 சதவீதமாகும்.
இவரது குழுமத்தை சேர்ந்த பிர்ஜ் மோகன் லால் முஞ்சால் மற்றும் சுனில் காந்த முஞ்சால் ஆகியோர் இரண்டாவது மற்றும் 3-வது இடத்தில் இருக் கின்றனர்.
பிர்ஜ் மோகன் லால் முஞ்சால் இம்மாத ஆரம் பத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதி ஆண்டில் இவரது சம்பளம் 43.64 கோடி ரூபாய்.
சுனில் காந்த் முஞ்சாலின் சம்பளம் 41.87 கோடி ரூபாய். நிப்டி பட்டியலில் உள்ள நிறுவன இயக்குநர்களின் சம்பளம் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சராசரியாக 9 கோடி ரூபாயாக நிப்டி பட்டியலில் உள்ள நிறுவன இயக்குநர்களுக்கு வழங்கப்படுகிறது. முதல் 10 இடங்களில் உள்ள இயக்குநர்கள் 19 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுகிறார்கள்.
நிப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 34 நிறுவனங்கள் மட்டுமே நிறுவனத்தின் லாபம் / இயக்குநர்களின் சம்பள விகிதத்தை வெளியிடுகின்றன.
பஜாஜ் ஆட்டோ, பாஷ், மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்கள் இது போன்ற பட்டியலை வெளியிடவில்லை. தவிர 10 பொதுத்துறை நிறுவனங்கள் இந்த பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் பார்தி மிட்டல் 27.18 கோடி ரூபாய், லுபின் நிறுவனத்தின் வினிதா குப்தா 24.86 கோடி ரூபாய், ஹிண்டால்கோ நிறுவ னத்தின் டி.பட்டாச்சார்யா 21.59 கோடி ரூபாய்,
டிசிஎஸ் நிறுவனத்தின் என்.சந்திரசேகரன் 21.28 கோடி ரூபாய், அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் குமார் மங்கலம் பிர்லா 19.04 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று முதல் 10 இடங்களில் உள்ளனர்.