ஐன்ஸ்டீனை விட அறிவுத் திறன் கொண்ட இங்கிலாந்து சிறுமி !

இங்கிலாந்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி அறிவுத் திறன் சோதனையில் இதுவரை யாரும் பெறாத வகையில் அதிகப் பட்சமாக 162 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். 
ஐன்ஸ்டீனை விட அறிவுத் திறன் கொண்ட இங்கிலாந்து சிறுமி !
ஹார்லோ பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியான நிகோல் பார், கடந்த வாரம் நடத்தப்பட்ட அறிவுத் திறன் சோதனையில் 162 புள்ளிகள் பெற்றார். 

இது இயற்பியல் விஞ்ஞானி ஹொக்கிங், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஐன்ஸ்டீனை விட அதிகம். 

மேற்குறிப்பிட்ட அனைவரும் 160 மதிப்பெண்களையே பெற்றுள்ளனர் என்பது கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகோலுக்கு 10 வயதாகும் போதே, கணிதப் பாடத்தில் அவரது வகுப்பு மாணர்களை விடப் பலமடங்கு சிறந்து விளங்கினார் என அவருடைய ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings