டிசம்பர் 25-ல் வெளியாகிறது 'ஜில் ஜங் ஜக்' !

தீரஜ் வைத்தி இயக்கத்தில் சித்தார்த் நடித்து, தயாரித்திருக்கும் 'ஜில் ஜங் ஜக்' திரைப்படம் டிசம்பர் 25ம் தேதி வெளியாகிறது.
 
பாலாஜி மோகன் இயக்கத்தில் சித்தார்த், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்த 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலமாக தயாரிப்பாளராக உருவானவர் நடிகர் சித்தார்த். அப்படத்தைத் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க பல்வேறு கதைகளைக் கேட்டு வந்தார். 

'காதலில் சொதப்புவது எப்படி' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் தீரஜ் வைத்தி இயக்கிய 'ஜில் ஜங் ஜக்' படத்தை நடித்து தயாரித்தார். அப்படத்தின் பர்ஸ்ட் லுக் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டு அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஹன்சிகா இருவரும் இணைந்து ட்விட்டர் தளத்தில் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்கள். அதற்கு சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படம் நாயகியே இல்லாமல் உருவாகும் நகைச்சுவைப் படமாகும். 

விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ம் தேதி வெளியாகும் என்று சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
Tags:
Privacy and cookie settings