சீனாவின் நான்சாங் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மொட்டை மாடியில் கிட்ட தட்ட மூன்று மணி நேரத்துக்கு ஒரு சிறுமி தாக்கப் பட்ட சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
 
கடந்த 25 ஆம் தேதி, நடந்த இச்சம்பவம் வீடியோ பதிவு செய்யப்ப ட்டு சமூக தளங்க ளில் வெளி யாகி சீனா முழுவதும் வை ரலாகி யுள்ளது. 

சுமார் ஆறு பெண்கள் சேர்ந்து இந்த வீடியோவில் லீ க்ஸியான் என்ற 14 வயது பெண்ணை 3 மணி நேரம் கடுமை யான வார்த்தை களால் திட்டியும், அடித்தும் காயம் ஏற்படுத்தி யுள்ளனர். 

அவர்களில் ஒரு பெண் வெறும் 99 நொடிகளில் லீயை சுமார் 32 முறை அறைந் துள்ளார். அவளது தலை முடியை இழுத்து பிடித்து, அவரை ஓங்கி உதைக்கும் போதுகூட லீ அந்தப் பெண்களை எதிர்த்து எதுவும் செய்ய வில்லை.
இந்தச் சம்பவத்தால் முகம் வீங்கி, மூக்கில் ரத்தம் வர, லீ மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட் டுள்ளார். லீ தமது பெயரைச் சொல்லி அழைத்த தாகக் குற்றம் சாட்டிய அந்தப் பெண்கள் இப்படியொரு தாக்குதலில் ஈடுபட்டு ள்ளதாகத் தெரிகிறது.

இந்த வீடியோ வைரல் ஆனதால் லீயைக் கண்டறிந்த போலீசார் இது தொடர்பான விசாரணை யில் தற்போது ஈடுபட்ட ள்ளனர். எனினும், லீயைத் தாக்கிய யாரும் இது வரைக் கைது செய்ய ப்பட வில்லை என்பது குறிப்பிட த்தக்கது.