மீண்டும் மம்மூத் யானைகள் விஞ்ஞானிகள் நம்பிக்கை !

பல்லாண்டுகளுக்கு முன்பு மம்மூத் என்ற யானை இனம் இருந்தது. அவை நீண்ட தந்தங்கள் மற்றும் உடலில் அடர்ந்த ரோமங்களுடன் கூடியது. தற்போதுள்ள யானைகளை விட உருவத்தில் மிகப் பெரியவைகளாக இருந்தன.
இயற்கையின் பல்வேறு மாற்றங்களால் அந்த யானை இனம் படிப்படியாக அழிந்து விட்டது. அந்த யானை இனத்தை மீண்டும் உருவாக்குவதில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற் கொண்டுள்ளனர்.

எடின் பர்க்கை சேர்ந்த விஞ்ஞானி வில்முட் தலைமையிலான குழுவினர் கடந்த 1996ம் ஆண்டில் டோலி என்ற ஆட்டு குட்டியை குளோனிங் முறையில் உருவாக்கினர். 

அது ஸ்டெம் செல்கள் மூலம் உருவாக்கப் பட்டது. அதே முறையில் மீண்டும் மம்மூத் யானை இனத்தை உருவாக்க முயற்சிகள் மேற் கொள்ளப் படுகின்றன.

தற்போதுள்ள குளோனிங் முறையை விட அதிநவீன தொழில் நுட்பத்துடன் திசு செல்களை ஸ்டெல் செல்களாக மாற்றி தீவிர நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.

இந்த தகவலை டோலி ஆட்டை குளோனிங் முறையில் உருவாக்கிய விஞ்ஞானி வில்முட் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
Tags:

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !