அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி... முதல்வர் !

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய தாரரர்கள் மிகவும் எதிர் பார்த்து காத்திருந்த 6% அக விலைப்படி உயர்வை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி... முதல்வர் !
மத்திய அரசு ஊழியர்களுக்கான 6 சதவீத அகவிலைப் படி உயர்வு கடந்த மாதம் அறிவிக்கப் பட்டது. இதன்படி 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அகவிலைப் படி உயர்ந்தது. 

மத்திய அரசு ஊழியர் களுக்கு அகவிலைப் படி உயர்வு எப்போ தெல்லாம் அறிவிக்கப் படுகிறதோ அதை பின்பற்றி தமிழக அரசும் உடனடியாக அக விலைப்படி உயர்வை தனது ஊழியர்களுக்கு அறிவிக்கும். 

ஆனால் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்து பல வாரங் களாகி விட்ட நிலையில் தமிழக அரசு அது குறித்து வாயே திறக்காமல் அமைதி காத்து வந்தது 

அரசு ஊழியர்களிடையே பெரும் அதிருப் தியை ஏற்படுத் தியது. 

இந்நிலையில் இன்று தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூ தியதாரர்களுக்கு 6% அக விலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித் துள்ளார். 
இந்த அக விலைப்படி உயர் வானது கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் கணக் கிட்டு வழங்கப் படும்.

இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் சுமார் 18 லட்சம் பேர் பயனடைவர். இவர்களுக்கு ரூ366 முதல் 4,620 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.
Tags:
Privacy and cookie settings