வலங்கைமான் அருகே ஆசிரியையிடம் 9½ பவுன் சங்கிலி !

மொபட்டில் சென்ற பள்ளி தலைமை ஆசிரியை கீழே தள்ளி 9½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வலங்கைமான் அருகே ஆசிரியையிடம் 9½ பவுன் சங்கிலி !
தலைமை ஆசிரியை 

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை அடுத்த விருப்பாட்சிபுரம் பரவாகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது48). இவர் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். 

இவருடைய மனைவி ஜெயக்கொடி (42). இவர் வலங்கைமானை அடுத்த பாடகச்சேரி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். 

இவர் பள்ளிக் கூடத்துக்கு தனது மொபட்டில் செல்வது வழக்கம். நேற்று ஜெயக்கொடி வழக்கம் போல காலை 9 மணி அளவில் பள்ளிக் கூடத்துக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். 
நகை பறிப்பு 

பாடகச்சேரி அருகே அவர் சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் ஜெயக்கொடி மொபட்டை காலால் உதைத்தனர்.

இதில் ஜெயக்கொடி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர்கள் 2 பேரும் சேர்ந்து அவர் அணிந்திருந்த 9½ பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். 

காயம் 

மர்ம ஆசாமிகள் கீழே தள்ளியதில் படுகாயம் அடைந்த ஜெயக்கொடியை அப்பகுதியை சேர்ந்த வர்கள் மீட்டு வலங்கைமான் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 
அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து வலங்கைமான் போலீசில் ஜெயராமன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து ஜெயக் கொடியிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.
Tags:
Privacy and cookie settings