மும்பை அழகிகள் சலித்து விட்டார்கள் போலிரு க்கிறது. இரண்டு நாள் முன்பு பூஜை போட்ட மாந்தன் படத்தில் ஹீரோயினாக நடிக்க பஹ்ரைன் நாட்டிலி ருந்து அழைத்து வந்திருக் கிறார்கள் ஒரு பேரழகியை. பார்த்தால் மின்னல் போலிருக்கும் இவரது பெயர் கன்னல்.
காதலுக்காக ஒருவன் அனைத்தையும் இழக்கிறான் என்றால் காதலி அந்தளவுக்கு மயக்குகிறவளாக இருக்க வேண்டும் அல்லவா? அதற்காகதான் பஹ்ரைனிலிருந்து கன்னலை கொண்டு வந்திருக்கிறார்கள்.
பூஜை போட்ட அன்றே சுறுசுறுப்பாக படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார்கள். சீக்கிரமா படத்தை முடிச்சு கன்னலை கண்ணுல காட்டுங்கப்பா