மாரடைப்பு என்றால் என்ன?





மாரடைப்பு என்றால் என்ன?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாய் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி வரும். சிலருக்கு மரணத்தை கொடுக்கும். அஞ்சைனா என்ற மார்புவலி, ரத்தக் குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும்.
மாரடைப்பு என்றால் என்ன?
இந்த அடைப்புகளால் இதய தசைகள் செயல் குறைந்து, நலிவடைகிறது. இ.எப்., என்ற இதய தசைகள் இயக்கத்தின் செயலை குறிக்கும் குறியீடு. இது 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இருக்க வேண்டும். 

இது தான் முதலில் ஏற்படுகிறது. அதன் பின் தான் மார்புவலி. கரோனரி ரத்தக் குழாயின் முழு அடைப்பு தான் மாரடைப்புக்குக் காரணம். முன் கூட்டியே, 70 முதல் 90 சதவீதம் அடைப்புள்ள குழாயில், மீதியுள்ள குழாயில் ரத்தம் உறைந்து முழு அடைப் பாகிறது.

இந்த நேரத்தில், மார்புக் கூடு முன் கடுமையான வலி, இந்த வலி இடது தோல் பட்டைக்கு பரவுதல், முதுகுக்குப் பின் வலி வருதல், சில சமயங்களில் பல் வலி, பகட்டு வலி, கழுத்து வலி, விழுங்க கஷ்டம், காஸ் அடைப்பு போன்று பல அறிகுறிகள் தென்படலாம். 

மவுனமான மாரடைப்பு
மவுனமான மாரடைப்பு என்றால் என்ன?
இந்த அறிகுறிகள் இல்லாமல், பரிசோதனைக்கு வரும் போது மாரடைப்பு கண்டு பிடிக்கப் படுகிறது. இது மவுனமான மாரடைப்பு. இதை இ.சி.ஜி., மூலம் தெரிந்து கொள்ளலாம். 

இந்த மாரடைப்பை ஊர்ஜிதம் செய்ய, என்சைம் பரிசோதனை செய்யலாம். தற்போது டிராப்ட் டெஸ்ட் என்ற பரிசோதனை இதய தசைகள் பழுதடைந் ததை காட்டும். 

அதன் பின், எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை. மார்பு வலி, மாரடைப்பு என்று அறிந்த பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும். 
இல்லை யென்றால், அன்ஸ்டேபில் ஆஞ்ஜினாவால் (UNSTABLE ANGINA) ஒருநாள் கண்காணித்து, அடுத்த நாள் அனுப்பலாம். இல்லை யென்றால், தேவை யில்லாமல் ஐ.சி.யு., அட்மிஷன் என்று பல ஆயிரம் செலவழிக்க வேண்டி வரும். 

அடைப்புக்கு காரணமான ஆஞ்ஜியோ கிராம் செலவு, ஐ.சி.யு., செலவைவிடக் குறைவு தான். ஆஞ்ஜியோ கிராம் பரிசோதனைக்கும், டி.எம்.டி., எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை களுக்கும் உள்ள வேறுபாடுகள் டி.எம்.டி., என்ற பயிற்சி இ.சி.ஜி., 
மாரடைப்பு என்றால் என்ன?
இதில் ரத்தக் குழாய் அடைப்பு, இதய தசைகள் செயல் பாடு, தாறுமாறாக இல்லாமல், இதயம் மூச்சிரைப்பு, படபடப்பு, மார்புவலி கண்டறியலாம்.

அனுமானமாக அடைப்பை காட்டும். எக்கோ கார்டியோ கிராம் இதய நான்கு அறைகள், நான்கு வால்வுகள், ரத்த ஓட்டம், இதய தசைகளின் செயல்பாடு இவைகளை குறிக்கும். 

கொலஸ்டிரால் என்ற லிப்ட் புரபைல், இதில் நல்ல கொழுப்பு (HDL),கெட்டக் கொழுப்புகளால் LDL, VLDL, டிரை இளரைடு இவை கண்டு பிடித்து அடைப்பின் அனுமானத்தோடு கூறலாம். 
கரோனரி ஆஞ்ஜியோ கிராம் என்ற ஊடுருவல் பரிசோதனை, துல்லியமாக ரத்தக்குழாய் அடைப்பை காட்டும். இதற்கு, மருந்தை உட்செலுத்தி படமெடுத்து காட்டலாம்.

இதில் ரத்த ஓட்டத்தை மூன்று ரத்தக் குழாயில் கண்டு கொள்ளலாம். இதில் இதய துடிப்பையும், ரத்த ஓட்டமும் டைனமிக் என்ற செயல்பாட்டில் பார்க்கலாம். 

மற்ற 64, 120, சி.டி., ஆஞ்ஜியோ கிராமில் கரோனரி வரைபடம் பார்க்கலாம். ஆனால், ரத்த ஓட்டம், சிஸ்டலி, டியஸ்டலி போன்றவற்றுக்கு படத்தைப் பார்க்க முடியாது. 
மாரடைப்பு என்றால் என்ன?
இது தான் சிறந்தது. பை-பாஸ் சர்ஜரி, ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சைக்கு இது தான் முக்கிய டெஸ்ட். யார் யாருக்கு எப்போது தீவிர சிகிச்சை (ICC) மாரடைப்பு, இ.சி.ஜி.,யில் மாற்றம், டிராப்ட் டெஸ்ட் பாசிடிவ் ஐ.சி.யு., தேவை. 

மூச்சுத் திணறல், இதய பம்பிங் குறைவினால் நுரையீரலில் தண்ணீர் சேர்தல். படபடப்பு, மயக்கம், தலைசுற்றல், இ.சி.ஜி.,யில் மாற்றம். மயக்கம், மூச்சு பேச்சு இல்லாத நிலை. 
ரத்த அழுத்தம் குறைதல், இதயத்துடிப்பு குறைதல். மேற் கூறியவைகள் தான் முக்கிய ஐ.சி.யு., அனுமதிக்கு காரணமாகிறது. இந்நிலையில், நல்ல முன்னேற்றம் வந்த பிறகு ஆஞ்ஜியோ கிராம் செய்ய வேண்டும். 

சில நேரங்களில், மேற்கூறிய நிலையில் முன்னேற்றம் இல்லை யென்றால், உயிரைக் காப்பாற்ற ரெய்டு (Rescue Angyogram plasty) ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டும். 
மாரடைப்பு என்றால் என்ன?
முன்கூட்டியே அடைப்பை அறிய, யார் யாருக்கு கரோனரி ஆஞ்ஜியோ கிராம் செய்ய வேண்டும். 

அ) ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, அதிக கொதிப்பு உள்ளவர்கள், பாரம்பரிய தன்மை, புகைப் பிடிப்பவர், அதிக எடை உள்ளவர்கள். 
ஆ) நெஞ்சு எரிச்சலுள்ள வர்கள், சிறிது தூரம் நடந்தால் மூச்சிரைப்பு, படபடப் புள்ளவர், நாளாக நாளாக இனம் புரியா தளர்ச்சி. 

இ) ரிஸ்க் உள்ள பணியாளர்கள் நடுத்தர வயதினர். வருடத்திற்கு ஒருமுறை குடும்பத் தலைவர் தனது குடும்பத்தினருக் காகவாவது இந்த மாரடைப்பு வர காரணமான அடைப்பை கண்டறிய வேண்டும்
Tags: