இறைச்சி மிகவும் ஆபத்தானது தெரியுமா?

பிராணிக ளிலிருந்து தருவிக்கப்பட்ட உணவுகளில் உயர்தர புரதங்களும் இன்னும் சில சத்துக்களும் இருந்தாலும் கூட
சிவப்பு இறைச்சி
அவை சில சமயங்களில் மரணத்திற்கு இட்டுச் செல்லும் அளவுக்கு அபாயகர மானவையும் கூட. சிவப்பு இறைச்சி புற்று நோய்க்கு வித்திடும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. 

சிவப்பு இறைச்சி, பெருங்குடல் ஆசன புற்றுநோய்க்கு இட்டுச் செல்லும் என்பதற்கு தக்க ஆதாரங்கள் உள்ளன.

ஆகையால் சிவப்பு இறைச்சியைத் தவிர்க்கு மாறும் பதனிடப்பட்ட இறைச்சிகளை முற்றிலும் தவிர்க்கு மாறும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 
இறைச்சி உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படுவது எப்படி? சிவப்பு இறைச்சிகளில் அளவுக்கு அதிகமான குருதிச்சிவப்பு இரும்பு (haem iron) இருக்கிறது.

(உதா : இறைச்சி, இறைச்சி உணவுப் பொருட்கள், இரத்த உணவுப்பொருட்கள்). குருதிச் சிவப்பு அல்லாத இரும்புச் சத்து தாவர உணவுகளில் இருக்கிறது.

(உதா : தானியங்கள், பீன்ஸ், காய்கறிகள், தௌபு, அத்தி, கொண்டைக் கடலை மற்றும் ஏப்ரிகோட்.) குருதிச் சிவப்பு இரும்பில் புற்றுநோயை வரவழைக்கும் என்-நைட்ரோசோ இருக்கிறது. 

இந்த வகை சிவப்பு குருதி இரும்பு டிஎன்ஏவுக்கு சேதத்தை விளைவித்து புற்றுநோய் செல் வளர்ச்சிகளுக்கு வித்திட்டு விடுகிறது. 
சிவப்பு இறைச்சியில் உள்ள இந்த வகை இரும்பு பெருங்குடலில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

சமைக்கும் முறை சில வகை சிவப்பு இறைச்சிகள் அப்படியே நெருப்பில் அதிகமான சூட்டில் வாட்டி எடுக்கப் படுகின்றன. 

இப்படி வாட்டி எடுக்கப்படும் பொழுது இந்த இறைச்சி கருகி புற்றுநோயை வர வழைக்கும் ஹேட்ரோ சைக்ளிக் எமன் என்ற இரசாயனங்கள் வெளிப்படு கின்றன. 
ஹேட்ரோ சைக்ளிக் எமன்
தசை இறைச்சிகளான பன்றி, மாடு, மீன் போன்ற வற்றை சமைக்கும் பொழுது ஹேடேரோசைக்ளிக் எமைன் வளிப்படுகிறது. 

இது வரைக்கும் சுமார் 17 விதமான புற்றுநோயை வரவழைக்கும் ஹேடேரோசைக்ளிக் எமைன் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.

இந்த இரசாயனங்கள் உருவாகுவதற்கு சூடு மிக முக்கியமான காரணமாகும். பொரித்தல், அணலில் வாட்டுதல், பார்பர்கியூ போன்றவை எல்லாம் மிகப் பெரிய அளவில் இந்த இரசாயனங் களை வெளிப் படுத்துகின்றன. 

அவணில் வேகவைப்பது, பேக் செய்வது குறைவான சூட்டில் செய்யப் படுவதால் குறைவான அளவு ஹேடேரோசக்ளிக் எமைனையே வெளிப்படுத் துகின்றன.

சூடு அதிகமாக இருக்கும் பொழுது ஹேடேரோசைக்ளிக் எமைனும் அதிகமாக வெளிப்படுகிறது. கொழுப்பு விகிதம் இறைச்சியில் கெட்டி கொழுப்பு ஒமேகா-6 கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. 
பெண்களுக்கு 'அந்த' இடத்தில் துர் நாற்றம் நீங்க?
இதற்கு புற்றுநோயை வரவழைக்கும் தன்மை உண்டு. நாம் இன்று உட்கொள்ளும் பெரும்பாலான இறைச்சிகளில் கெட்டி கொழுப்பு (கெட்ட கொழுப்பு) அதிகமாகவும், 

கெட்டி அல்லாத கொழுப்பு (ஆரோக்கி யமான கொழுப்பு) குறைவாகவும் இருக்கிறது.

கொழுப்பின் அளவை விட எந்த ரகத்தைச் சேர்ந்த கொழுப்பு என்பதே ஒருவரின் ஆரோக்கி யத்தை நிர்ணயிக்கிறது. 
பதனிடப்பட்ட இறைச்சிகள் நீங்கள் உட்கொள்ளும் சிவப்பு இறைச்சி வெகு நாட்களுக்குப் முன்பதாகவே அறுக்கப்பட்ட பதனிடப்பட்ட இறைச்சியாக இருக்கக் கூடாது. 

இப்படிப்பட்ட இறைச்சியை நீங்கள் அறவே உட்கொள்ளக் கூடாது. இப்படிப்பட்ட சிவப்பு இறைச்சிதான் பெருங்குடல் - ஆசன புற்று நோய்க்கு முதன்மை யான காரணம். 

இறைச்சியைப் பதனிடும் பொருட்டு அதில் நைட்ரேட் என்ற இரசாயனத்தைச் சேர்க்கிறார்கள்.

இந்த நைட்ரேட் இறைச்சியைப் பதனிடவும், இறைச்சிக்கு வர்ணம் கொடுக்கவும், இறைச்சியின் சுவையைக் கூட்டுவதற் காகவும் பயன்படுத்தப் படுகிறது. 

இந்த நைட்ரேட் நம்முடைய குடலுக்குள் புற்றுநோயை உருவாக்கும் வஸ்துவாக உருமாறுகிறது.பதப்படுத் தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் நைட்ரேட்டும் அதிகமாக இருக்கிறது. 

சோடியம் நைட்ரேட் அறவே உணவில் சேர்க்கப்படக் கூடாத ஒரு பொருளாகும். 

இறைச்சியின் துணை கொண்டு தயாரிக்கப் படும் சோசேஜ், ஹோட் டோக் போன்றவை யும் இதே முறையில் த¡ன் தயாரிக்கப் படுகின்றன. 
சிவப்பு இறைச்சி, பதனிடப்பட்ட இறைச்சி மற்றும் பதனிடப்பட்ட இறைச்சியின் துணை கொண்டு செய்யப்படும்
சர்க்கரைக்குப் பதிலாக எத்தனால் & எரி சாராயம் !

உணவுப் பொருட்களை பயனீட்டா ளர்கள் ஒரு நாளைக்கு சுமார் 1.7 அவுன்ஸ் அளவில் உட்கொள்ளும் பொழுது பெருங்குடல் - ஆசன புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 21% அதிகரிக்கிறது.
Tags:
Privacy and cookie settings