நள்ளிரவில் வீடு புகுந்து பைனான்சியர் வெட்டி கொலை!

தேன்கனிக்கோட்டை அருகே நள்ளிரவில் பைனான்ஸ் அதிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 
சிசிடிவி கேமராவை துணியால் கட்டி காட்சிகள் பதிவாகாமல் செய்துவிட்டு, பைனான்ஸ் அதிபரை வெட்டிச் சாய்த்துள்ளது மர்ம கும்பல். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலம் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாதையன் (60). 
 
பைனான்ஸ் அதிபர். இவர் தனது வீட்டின் முன் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். மாதையனின் மனைவி தனலட்சுமி. 

இவர்களுக்கு சுகன்யா (27), சுகந்தா (24) என்ற 2 மகள்களும், அஜய் (எ) திலகராஜ் (22) என்ற மகனும் உள்ளனர். இதில், சுகன்யாவுக்கு திருமணமாகி விட்டது. மாதையன் ஜவுளி தொழிலுடன் மாத ஏல சீட்டும் மாதையன் நடத்தி வந்தார். 

மேலும் அப்பகுதியை சேர்ந்த பலருக்கு வட்டிக்கும் பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மாதையன் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு, வீட்டின் கீழ் பகுதியில் கட்டிலில் படுத்து தூங்கி கொண்டி ருந்தார். 

குடும்பத்தார் வீட்டின் மேல் மாடியில் தூங்கி கொண்டி ருந்தனர். காலை 6 மணியளவில் காபி கொடுப்ப தற்காக, தனலட்சுமி மாடியில் இருந்து கீழே வந்தார். 

அப்போது கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மாதையன் ரத்த வெள்ளத்தில் கட்டிலில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியில் அழுது புலம்பினார் தனலட்சுமி. தகவலறிந்து வந்த அக்கம் பக்கத்தினர் கெலமங்கலம் போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். 

கொலைக்கு முன்பாக, ஜவுளி கடையின் முன்பகுதியில் சிசிடிவி கேமரா உள்ளது. அந்த கேமராவை மர்ம நபர்கள் துணியால் கட்டி விட்டு, கொலையை செய்து ள்ளனர். 

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஏலச்சீட்டு அல்லது வட்டிக்கு பணம் கொடுத்ததில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறில் மாதையன் கொலை செய்யப்பட் டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 

சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மங்கி குல்லாவை போலீசார் தடயவியல் சோதனைக்கு அனுப்பி யுள்ளனர். 
Tags:
Privacy and cookie settings